வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோருமே முடி உதிர்வு பிரச்சனையை சந்திக்கின்றோம். இதை தடுக்க நாமும் எத்தனையோ ஷாம்புகளை வாங்கி பயன்படுத்துகிறோம். ஆனால், அவை அனைத்துமே தற்காலிமாக தான் பலனை தரும். ஆனால், நல்லெண்ணெயை முடிக்கு பயன்படுத்தினால் கூந்தல் வறட்சி, முடி உதிர்வு, முடி வலுவின்மை போன்ற கூந்தல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் குட் பை சொல்ல முடியும். அதற்கு நல்லெண்ணெய்யை மட்டும் தடவினால் போதாது, கூடவே சில பொருட்களையும் சேர்த்து பயன்படுத்த வேண்டும்.
நல்லெண்ணெய், கறிவேப்பிலை
3 ஸ்பூன் நல்லெண்ணெயுடன் 1 கொத்து கறிவேப்பிலையை போட்டு லேசாக சூடாக்கி, ஆறியதும் அதை வடிகட்டி உச்சந்தலை மற்றும் முடியின் வேர் வரை தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். அதை 30 நிமிடங்கள் ஊறவைத்து எப்பவும் போல ஷாம்பு போட்டு தலைக்கு குளித்துக் கொள்ளவும். இப்பது வாரத்துக்கு 2 முறை செய்து வர முடி வளர்ச்சி அதிகரிப்பதோடு, இளம்வயதிலேயே முடி நரைப்பதும் தடுக்கப்படும்.
நல்லெண்ணெய், கற்றாழை
3 ஸ்பூன் நல்லெண்ணெயுடன் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை கலந்து பேஸ்ட்டாகி, உச்சந்தலை முதல் முடியின் வேர் வரை தடவி 30 ஊறவிட்டு, ஷாம்பு போட்டு தலையை அலசிக் கொள்ளவும். இது முடியை வறட்சியை போக்கவும், உச்சந்தலையை ஈரப்பதமாகவும் வைத்துக் கொள்ளும். வாரத்திற்கு இரண்டு முறை செய்யலாம்.
தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய்
தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் இரண்டையும் சம அளவு கலந்து, உச்சந்தலை மற்றும் முடியின் வேர் வரை நன்றாக தடவி மெதுவாக 5 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். 35 நிமிடங்கள் அப்படியே ஊறவிட்டு, எப்பவும் போல ஷாம்பு போட்டு முடியை வாஷ் செய்துக் கொள்ளவும். இது வலுவிழந்த முடியை வலிமையாக்குவதோடு, முடியை கண்டிஷன் செய்யவும் உதவும். இந்த செயல்முறையை வாரத்திற்கு மூன்று முறை பின்பற்றி வரலாம்.
நல்லண்ணெய், வெந்தயம்
2 ஸ்பூன் நல்லெண்ணெயுடன் 1 ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து 5 நிமிடங்கள் நன்றாக சூடாக்கி, அதை வடித்துக் கொள்ளவும். ஆறிய பிறகு உச்சந்தலை மற்றும் முடியின் வேர் வரை தடவி, ஒரு டவலை சூடான தண்ணீரில் நனைத்து தலையை சுற்றி கட்டிக்கொள்ளவும். அதை அரை மணி நேரம் அப்படியே விட்டு, பின்னர் எப்பவும் போல கொஞ்சமாக ஷாம்பு போட்டு தலையை அலசிக் கொள்ளவும். இது பேன், பொடுகை நீக்கி, முடி உதிர்வை தடுக்கிறது.