பள்ளி தலைமை ஆசிரியர் 6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அந்த ஆசிரியருக்கு 47 ஆண்டுகள் கடும் காவல் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
காளையார்கோவில் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த முருகன், அருகில் உள்ள கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இந்த பள்ளியில் கடந்த 2014 ஆம் ஆண்டு 4 ஆம் வகுப்பு மற்றும் 5 ஆம் வகுப்பு படித்த 6 மாணவிகளுக்கு, தலைமை ஆசிரியர் முருகன் பாலியல் தொல்லை அளித்ததாக பாதிக்கப்பட்ட 6 மாணவிகளில் ஒரு மாணவி மட்டும் துணிந்து வந்து சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், மாணவியின் புகாரை அடுத்து, போக்சோ, தீண்டாமை ஒழிப்புச் சட்டம் உட்பட சுமார் 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தலைமை ஆசிரியர் முருகனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணையானது, சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தற்போது, இந்த வழக்கின் விசாரணை மீண்டும் நடைபெற்ற போது, சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமை ஆசிரியர் முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.
குறிப்பாக, 2 ஆயுள் தண்டனை உடன், கிட்டதட்ட 47 ஆண்டுகள் கடும் காவல் தண்டனையையும் நீதிபதி சரத்ராஜ் பிறப்பித்தாார்.
மேலும், தண்டனையின் இன்னொரு பகுதியாக “அபராதமாக 69 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்” என்றும், அதிரடியாகவும் தீர்ப்பு அளித்தார்.
அத்துடன், “பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நிவாரணமாக தமிழ்நாடு அரசு சார்பில் 29 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்” என்றும், சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.
இதனிடையே, 6 மாணவிகளை சீரழித்த பள்ளி தலைமை ஆசிரியருக்கு 47 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்க்கப்பட்ட சம்பவம், சக பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.