Mon. Jun 30th, 2025

மனைவியுடன் கள்ளக் காதலன்.. சுட்டுத் தள்ளிய கணவன்..!

மனைவியுடன் இருந்த கள்ளக் காதலனை, கணவன் சுட்டுத் தள்ளிய விவகாரத்தில், ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த அஞ்செட்டி அருகே உள்ள அட்டப் பள்ளம் கிராமத்தில் தான் இப்படி ஒரு துயர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஒசூர் அடுத்த அஞ்செட்டி அருகே உள்ள அட்டப் பள்ளம் பகுதியை சேர்ந்த 62 வயதான ராஜேந்திரன், அப்பகுதியில் கம்பரஷர் டிராட்ரில் ஜாக்கி ஓட்டும் பணி செய்து வந்தார்.

இவர், பணி நிமித்தமாக அடிக்கடி வெளியூர் சென்று விடுவது வழக்கம். இதனால், ராஜேந்திரன் மனைவி சரோஜாவிற்கும், அதே பகுதியைச் சேர்ந்த மாதேஷ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அதுவே நாளடைவில் அவர்களுக்குள் தவறான பழக்கமாக, கள்ளக் காதலாக மாறி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இப்படி, மனைவியின் கள்ளக் காதலை தெரிந்துகொண்ட அவரின் கணவன் ராஜேந்திரன், தனது மனைவியையும், அவரது கள்ளக் காதலனையும் அழைத்து பல முறை கண்டித்து இருக்கிறார். ஒரு கட்டத்தில் இருவரையும் மிக கடுமையாக எச்சரித்து இருக்கிறார்.

ஆனாலும், அவர்கள் இருவரும் தங்களது கள்ளக் காதலை விடுவதாக இல்லை. இப்படியாக, இவர்களது கள்ளக் காதல் தொடர்ந்ததால், கடுமு் ஆத்திரமடைந்த கணவன் ராஜேந்திரன், கடந்த 2013 ஆம் ஆண்டு, அனுமதி பெறாத நாட்டு துப்பாக்கியால் மனைவியின் கள்ள காதலன் மாதேஷை அதிரடியாக சுட்டு கொன்றிருக்கிறார்.

இது தொடர்பாக, அஞ்செட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ராஜேந்திரனை கைது செய்தனர். அத்துடன், இது குறித்தான வழக்கு, ஓசூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதி மன்றத்தில் நடைப்பெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை தற்போது நிறைவடைந்த நிலையில், தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அதன்படி, மனைவியின் கள்ளக் காதலனை சுட்டுக்கொன்ற ராஜேந்திரனுக்கு, ஆயுள் தண்டனை வழங்கி ஓசூர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

மேலும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் நீதிமன்றம் விதித்து உள்ளது. அப்படி, அபராதத்தை கட்ட தவறினால், கூடுதலாக 2 மாதம் சிறை தண்டனை என்றும், நீதிபதி சந்தோஷ் அதிரடியாக உத்திரவிட்டார். இந்த வழக்கில் அரசு சார்பில் சின்னபில்லப்பா என்பவர் ஆஜரானது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம், அப்பகுதியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *