“ஊட்டி செல்வோருக்கு E Pass நடைமுறை மூலம் கிடைக்கும் சிரமங்கள் என்ன?” என்பதை இப்போது பார்க்கலாம்..
– இந்த E Pass நடைமுறை மூலம் லஞ்சம், ஊழல் போன்ற அதிகார துஸ்பிரயோகங்கள் அதிகமாக நடைபெறும்.
– மேட்டுப்பாளையம் – ஊட்டி செல்லும் சாலையின் நுழைவு வாயிலில் சிலர் காவல் துறை உதவியோடு Green Tax என்றும் நுழைவுவரியும் அனைத்து வாகனங்களிடமும் வசூல் செய்கிறார்கள். ஆனால் அது போன்ற அரசு உத்தரவு எதும் இருப்பதாக தெரியவில்லை. அந்த பணம் எங்குசெல்கிறது என்று தெரிவதில்லை கடந்த மூன்று ஆண்டுகலாமாக அனைவருக்கும் தெரிந்து நடைபெரும்இதை தடுக்க எந்த அரசு அதிகாரியும் முன்வைரவில்லை. இதை முதலில்மாவட்ட நிர்வாகம்தெளிவு படுத்திதடுக்க வேண்டும். E Pass நடைமுறை மூலம் மேலும் இதுபோன்ற துஸ்பிரயோகங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
– இந்த E Pass நடைமுறை இந்தியாவுக்குள் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் தடையின்றி சென்று வரலாம் என்ற தனிமனித உரிமைகளை பாதிப்பது போல் உள்ளது. நாளை இதை முன்னுதாரணமாகக் கொண்டு சென்னைகோவைதிருப்பூர் போன்ற பெருநகரங்களிலும் கூட்ட நெரிசலை கட்டுபடுத்த இதுபோன்ற உத்தரவு வேண்டும் என்ற கோரிக்கைமுன் உதாரனமாக எழும்.
இதற்கு பதிலாக ,
1.காரமடை – கல்லாறு- மேட்டுப்பாளையம் By Pass திட்டம் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. அதை நிறைவேற்றலாம்.
2. லவ்டேல் – HPF இந்த பகுதியில் ஊட்டி நகருக்குள் செல்லாமல் ஒரு மற்றுபாதை சீராக்கப்படலாம்.
3. மசினகுடி – கோத்தகிரி சாலை ஊட்டி நகருக்குள் செல்லாமல் மாற்று பாதை ஒழுங்குபடுத்தப்படலாம்.
4. HPF பகுதியில்உள்ள காலிஇடத்தில் வாகனம் நிறுத்த ஏற்பாடு செய்யலாம்
– சட்ட விரோதமான கட்டடங்கள், சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படலாம், சட்டவிரோதமாக மரம் வெட்டுவது வனதுறையினர் சுற்றுலா பயனிகளைசாபரி என்ற பெயரில் காட்டுக்குள் அழைத்துசென்று வனவிலங்குகளை துன்புறுத்துவது போன்ற நிலுவையில் உள்ள வழக்குகளிலும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கலாம்.
– சொந்த நாட்டிற்குள்ளே பாஸ்போர்ட் வாங்கி விட்டு செல்ல வேண்டும் என்பது போல் Pass வாங்கிவிட்டு செல்ல வேண்டும் என்பது நடைமுறை சாத்தியமல்ல. நீதிமன்றத்தின் நோக்கம் சரியானதாக இருக்கலாம் ஆனால் அதனால் பெரிய அளவில் எந்த பலனும் ஏற்பட வாய்ப்பில்லை.
– சுற்றுலாவை நம்பி தொழில் நடத்தும் சுமார் 5 லச்சம் குடுபங்களுக்கும் பண பலம் இல்லாத பாமர மக்களுக்கு இது சிரமத்தை தான் உண்டாக்கும். இந்த உத்தரவை நீதிமன்றத்தில் மறு பரிசீலனைக்கு நீலகிரி மாவட்ட நிர்வாகம் தமிழக அரசு உட்படுத்த வேண்டும் அல்லது மேல் முறையீடு செய்ய வேண்டும்.
– நடைபாதை வியபாரிகள் முதல் டீகடை பேக்ரி ஓட்டல் லாடஜ் மளிகை கடை காய்கரி மார்கெட் வியபாரிகள் காட்டேஜ் ஆட்டோ டாக்ஸி சுற்றுலா கைடு குதிரை சாவரி தொழிளாலர்கள் உள்பட சுற்றுலாவை நம்பி வாழும் மக்கள் அதிகம் பாதிப்பு அடைகிறார்கள்.
– நீலகிரியில்அடிப்படை வசதிகளையும் மாற்று பாதைகளையும் உருவாக்கி கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தலாம். இதை ஒழுங்குபடுத்த காவல் துறையும், வருவாய்துறையும் சுற்றுலா வனதுறை மற்றும் பொது நல அமைப்புகள் வியபாரிகள்சங்கம் இணைந்து சரியான திட்டமிடுதலை மேற்கொண்டால் தான் இதற்குசரியான தீர்வாக இருக்குமே தவிர, E Pass கொடுப்பதன் மூலம் எந்த பலனும் கிடைக்காது.