சிக்கன் ரைஸில் விஷம் கலந்து கொடுத்து சாப்பிட்ட சம்பவம் தாய் நதியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல்லில் தனியார் ஹோட்டலில் சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கி சென்று சாப்பிட்ட இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவகாரத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் நாமக்கல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முதியவர் சண்முகநாதன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்த நிலையில், இன்று நதியா உயிரிழந்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அத்துடன், உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து கொலை செய்த விவகாரத்தில் நதியாவின் மகன் 20 வயதான பகவதியை கைது செய்த போலீசார், தீவிர விசாரணைக்குப் பிறகு, அவரை சிறையில் அடைத்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.