Mon. Jun 30th, 2025

Blood Group Personality in Tamil | பொதுவாக ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு அன்னைக்கு டிவி, பேப்பர் என அனைத்திலும் நம்ம ராசிக்கு அந்த வருடம் முழுவதும் எப்படி இருக்கும், என்னென்ன சிரமங்கள் சந்திக்க போகிறோம் என்று ராசிபலன் சொல்வார்கள். ஆனால், நம் பெர்ஷ்னாலிட்டியை கண்டுபிடிக்கவும் தெரிந்துக்கொள்ளவும் நிறைய வழிகள் உள்ளன.

அவற்றில் ஒன்று தான் இரத்த வகையின் குணங்கள். அதாவது, நமது இரத்த வகையை வைத்தே நமது குணம் எப்படி இருக்கும் என்று தெரிந்துக்கொள்ள முடியும். கேட்கவே, ஆர்வமாக இருக்கிறது அல்லவா? சரி வாங்க, உங்க இரத்த வகையை வைத்து உங்க கேரைக்டர் அல்லது பெர்ஷ்னாலிட்டி எப்படி இருக்கும் என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

ஏ இரத்த வகை [A Blood Type Personality]

A இரத்த வகையை கொண்டவர்களிடம் தலைமைத்துவம் சற்று அதிகமாகவே காணப்படும். அதுமட்டுமல்லாமல், இவர்கள் எதிலும் பொறுமையுடனே செயல்படுவார்கள். மேலும், இவர்களிடம் மனிதநேயம் நிறைந்து காணப்படும். அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடியவரும் கூட. எந்த காரியத்தியலும் அவ்வளவு எளிதில் தோல்வியை ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள்.

விடாமுயற்சி குணத்தால் எதிலும் துணிந்து இறங்குவார்கள். இவர்களிடம் எந்த வேலையாக இருந்தாலும் நம்பிக்கையோடு கொடுத்தால் சிறப்பாக செய்து முடிக்கும் வல்லமை கொண்டவராக இருப்பர். அதேபோல், இந்த இரத்த வகையை கொண்டவர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய மாட்டார்கள். ஒரு வேலையை முடித்துவிட்டு தான் அடுத்த வேலையை தொடுவார்கள்.

ஏ+ இரத்த வகை [A Positive Blood Group Personality]

A இரத்த வகையில் உள்ள அனைத்து குணங்களும் A+ இரத்த வகைக்கும் உண்டு என்றாலும், A+ இரத்த வகையை கொண்டவர்களின் ஆற்றலானது, A இரத்த வகையைவிட இரு மடங்கு அதிகமாகவே இருக்கும். அதனால், அனைத்து விஷயங்களையும் மிகவும் ஈஸியாக செய்து முடிப்பார்கள். அதுமட்டுமல்லாமல், இவர்களிடம் நேர்மறையான சிந்தனை (Positive Vibrations) சற்று அதிகமாகவே இருக்கும்.

ஏ- இரத்த வகை [A Negative Blood Group Personality]

A இரத்த வகை மற்றும் A+ இரத்த வகையுடன் ஒப்பீடும் போது, A- இரத்த வகையை கொண்டவர்கள் கொஞ்சம் மந்தமாக காணப்படுவார்கள். சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், இவர்களுக்கு அவர்கள் மீதான நம்பிக்கையே குறைவாக தான் இருக்கும்.

அதுமட்டுமல்லாமல், இவர்களிடம் கூச்சசுபாவம் அதிகமாகவே இருக்கும். அதேபோல், மனதில் உள்ள உணர்வுகளை வெளிப்படுத்தவும் மாட்டார்கள். இருந்தாலும், இவர்களிடம் ஒரு வேலையை கொடுத்தால் சிறப்பாக செய்து முடித்துவிடுவார்கள்.

பி இரத்த வகை [B Blood Group Personality]

B இரத்த வகையை கொண்டவர்கள் அனைத்து விஷயங்களையும் மிக தெளிவாக முடிவு எடுக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். குறிப்பாக, அனைத்து விஷயங்களிலும் சமுதாயத்தில் இவர்கள் தனித்துவமாக தெரிய வேண்டும் என்று நினைப்பவர்கள். இருப்பினும், இவர்கள் யாரிடமும் சுயநலமாக இருக்க மாட்டார்கள்.

இவர்களின் மனதை பொறுத்துவரை மிகவும் இளகிய மனம் படைத்தவர். அதுமட்டுமல்லாமல், இந்த பிரிவு இரத்த வகையை உடையவர்களுக்கு நண்பர்கள் குறைவாக இருந்தாலும், உண்மையானவர்களாக இருப்பார்கள்.

பி+ இரத்த வகை [B Positive Blood Group Personality]

B இரத்த வகையை சேர்ந்தவர்களிடம் எதிர்பார்ப்பு குணம் சற்று அதிகமாகவே இருக்கும். இவர்கள் செய்யும் எந்த வேலையாக இருந்தாலும் அவற்றை நேர்மையாக செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள். அதாவது உறவு, காதல், தொழில் என எதிலும் நேர்மையுடன் இருப்பார்கள். இவர்களை புரிந்துக்கொள்வது கடினமானதாக இருந்தாலும், மற்றவர்களை புரிந்துக்கொள்வதில் வல்லவர்.

பி- இரத்த வகை [B Negative Blood Group Personality]

B இரத்த வகையை கொண்டவர்களிடம் சுயநல புத்தி சற்று அதிகமாகவே இருக்கும். அதாவது, மிகவும் சுயநலவாதியாக இருப்பார்கள். மற்றவர்கள் எது சொன்னாலும் காதில் கூட போட்டுக் கொள்ள மாட்டார்கள். இவர்களுக்கு என்ன தோனுகிறதோ அவற்றை தான் செய்வார்கள்.

இருந்தாலும், இவர்களை சுற்றி இருப்போரை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர். இருப்பினும், உறவு முறை என்று வரும்போது கோபம் சற்று அதிகமாகவே வரும். பொறுமையை இழந்துவிடுவார்கள்.

ஏபி இரத்த வகை [AB Blood Type Personality]

AB இரத்த வகையை சேர்ந்தவர்களின் குணம் எப்படி இருக்குமென்றால், ஏ இரத்த வகை மற்றும் பி இரத்த வகை ஆகியவற்றின் கலவையாக இருக்கும். தனித்துவமாக யோசிக்கும் திறன் படைத்தவர் என்பதால், இவர்களை புரிந்துக்கொள்வது என்பது மிகவும் கடினம் என்றே சொல்லலாம்.

இருந்தாலும், ஒரு விஷயத்தில் சரியான முடிவு எடுப்பதில் தடுமாறுவார்கள். எல்லோரிடமும் எளிதில் பழகக்கூடிய குணம் படைத்தவர். இருப்பினும், இவர்களுக்கு நெருங்கிய நண்பர்கள் என்று அதிகமாக இருக்கமாட்டார்கள். எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள், உணர்ச்சிவசப்படுவார்கள்.

ஏபி+ இரத்த வகை [AB Positive Blood Group Personality]

AB+ இரத்த வகையை கொண்டவர்கள் AB இரத்த வகைக்கு அப்படியே அப்போசிட். சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் கோபம்படமாட்டார்கள். அனைவரிடமும் நண்பர்களை போல் பழகுவார்கள். ஜாலி டைப். இவர்களிடன் நகைச்சுவை திறன் அதிகமாகவே இருக்கும்.

சுற்றி இருப்பவர்களை அனைவரையும் ஹாப்பியாக வைத்திருப்பார்கள். இவர்களுக்கு புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் ஜாஸ்தி. அதுமட்டுமல்லாமல், உடல் நலத்தில் அதிகம் அக்கறை செலுத்தும் நபராகவும் இருப்பார்கள்.

ஏபி- இரத்த வகை [AB Negative Blood Group Personality]

AB+ இரத்த பிரிவை சேர்ந்தவர்கள் யாராவது தவறு செய்துவிட்டார்கள் என்றால், அந்த தவறை எளிதில் மனிக்கவே மாட்டார்கள். அது உறவோ நட்போ. இருப்பினும், உறவுகளை எப்போதும் மகிழ்ச்சியாக பார்த்துக்கொள்ள கூடியவர். மேலும், எந்த விஷயமாக இருந்தாலும் அதில் இவர்களுக்கு லாபம் இருந்தால் மட்டுமே செய்வார்கள். அதேபோல், புத்திசாலியான நபர்களிடம் மட்டுமே நெருங்கி பழகுவார்கள்.

ஓ+ இரத்த வகை [O Positive Blood Group Personality]

O+ இரத்த வகையை கொண்டவர்களிடம் நேர்மை குணம் அதிகம் என்றே சொல்லலாம். பொய் சொல்வதும் இவர்களுக்கு பிடிக்காது. அதற்காக அரிச்சந்திரன் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். தேவையானவற்றிற்கும் நல்லதிற்கு மட்டும் பொய் சொல்வார்கள். அதேபோல், இவர்களுக்கு பொய் பேசுபவர்களை கண்டாலே பிடிக்காது. உதவி என்ற சொல்லுக்கு ஓடி போய் உதவுபவர். அந்தளவிற்கு உதவி செய்யும் குணம் இவர்களிடத்தில் நிறைய இருக்கும்.

ஓ- இரத்த வகை [O Negative Blood Type Personality]

இவர்கள் எந்த விஷயத்தையும் ஸ்மார்ட்டாக சிந்தித்து செயல்படுபவர். சுருக்கமாக சொல்லப்போனால், ஸ்மார்ட் பெர்ஷன். எதிலும் உறுதியாக இருப்பார்கள். குறிப்பாக, அவ்வளவு சீக்கிரம் யாரிடமும் பழக மாட்டார்கள். அதேபோல், எளிதில் யாரையும் நம்பவும் மாட்டார்கள். புதிதாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புவர். யாரிடமும் அன்பை எளிதில் வெளிப்படுத்தமாட்டார்கள்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *