Sat. Aug 30th, 2025

TVK Madurai Maanadu: நடக்கப்போகும் முக்கிய நிகழ்வுகள் இதுதான்..!

Vijay

விஜய் மாநாட்டில் இவ்வளவு விஷயங்கள் நடக்க போகுதா? கதி கலங்கும் அரசியல் வட்டாரம்.. தமிழக அரசியல் களத்திலு தமிழக வெற்றி கழகத்தைச் சுற்றி, தளபதி விஜயை சுற்றி இப்ப என்ன நடக்குதுனு வாங்க பார்க்கலாம்…

கதி கலங்கும் அரசியல் வட்டாரம்!

​விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடக்கப்போகுது. கட்சியின் முதல் மாநாடு விழுப்புரத்தில் நடந்த நிலையில், தென் மாவட்டங்களில் தனது செல்வாக்கைக் காட்டுவதற்காக மதுரையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் விஜய்.

இந்த மாநாட்டின் முக்கியமான சுவாரசியங்கள், எதிர்பார்ப்புகள் என்னென்ன என்பதைதான் நம்ம இப்ப விரிவா அலசப்போறோம்..

TVK

​மாநாட்டுக்கான மாபெரும் ஏற்பாடுகள்:

​மிகப்பெரிய பரப்பு: மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரபத்தி என்ற இடத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் இந்த மாநாடு நடைபெற இருக்கிறது. இது, இதுவரை தமிழகத்தில் நடந்த அரசியல் மாநாடுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பரப்புளவு என்று கூறப்படுகிறது.

அப்படி என்ன அதிநவீன தொழில்நுட்பங்கள்?: அதாவது மாநாட்டு மேடை, ஒலி, ஒளி அமைப்புகள், மின் விளக்குகள் என்று அனைத்துமே மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்குக் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி எனப் பல்வேறு அடிப்படை வசதிகளும் செய்யப்படுகின்றன.

​முக்கியமாக கவனிக்கத்தக்க நடைபாதை: மாநாட்டு மேடைக்கு விஜய் வருவதற்காகவே பிரத்யேகமாக நீண்ட நடைபாதை அமைக்கப்படுகிறது. இது, தொண்டர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

​சாப்பாடு: மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்குச் சோறு போடுவதை ஒரு கலாச்சாரமாக வைத்துள்ள திராவிடக் கட்சிகளைப் போல், தமிழக வெற்றிக் கழகமும் கிடா வெட்டி இந்த முறை அன்னதானம் செய்ய ஏற்பாடுகள் நடைபெறுகிறது. ஏன் கிடா விருந்து தெரியுமா.. ஏனா, மாநாடு நடப்பது மதுரை மண்ணுல.. அங்க போய்.. சாம்பாரு, ரசம், தயிர் சாதமுனு சொன்னா தொண்டர்கள் எல்லாம் கொதிச்சு போயிருவாங்க.. அதுனாலதான் கிடா விருந்து…

​இந்த மாநாட்டில் என்ன அரசியல் முக்கியத்துவம்?:

​தென் மாவட்டங்களில் கட்சியை நிலை நிறுத்த ஏற்பாடு: அதாவது கட்சியோட முதல் மாநாடு வட தமிழகத்தில் நடந்த நிலையில், இந்த மாநாடு தென் தமிழகத்தின் அரசியல் மையமான மதுரையில் நடைபெறுகிறது. இது தென் மாவட்டங்களில், தனது செல்வாக்கை வலுப்படுத்திக்கொள்ள விஜய்க்கு உதவும் என்று, அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

​மாநாட்டில் விஜய்யின் கண்ணி பேச்சு அந்த பேருரை.. எப்படியான ஒரு சிறப்புரையாக இருக்கப்போகிறது?: மாநாட்டின் மிக முக்கியமான அம்சமே, விஜய்யின் உரைதான். விஜயின் பேச்சில், தற்போதைய தி.மு.க. அரசின் மீதான விமர்சனங்கள், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் நிலைப்பாடு, தனது அரசியல் பார்வை, கட்சியின் எதிர்காலத் திட்டம் போன்ற பல்வேறு முக்கிய விஷயங்கள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜயின் ​கூட்டணிக் கொள்கை என்ன?: தனித்துப் போட்டியிடுவதுதான் தங்களது கொள்கை என்பதை விஜய் இந்த மாநாட்டில் மீண்டும் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகம், யாருடனும் கூட்டணி வைக்கப் போவதில்லை என்பதையும், 2026 சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராகக் களமிறங்குவதுதான் இலக்கு என்பதையும் விஜய் தெளிவுபடுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

​மாநாட்டில் எதிர்பார்க்கப்படுவது என்ன?:

​தொண்டர்களின் வருகை மிக முக்கியம்: இந்த மாநாடுட்டுக்கு, சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் வருவார்கள் என்று, த.வெ.க.வினர் எதிர்பார்க்கின்றனர். இது, ஒரு அரசியல் கட்சி மாநாடாக மட்டும் இல்லாமல், ஒரு பெரும் கூட்டம் கூடும் என்றும் விஜயே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்.

​திரை நட்சத்திரங்கள், அரசியல் ஆளுமைகள் வருவார்களா?: விஜய்க்கு ஆதரவு தெரிவித்து, அரசியல் மற்றும் திரைப்படத் துறைச் சேர்ந்த பல்வேற ஆளுமைகள் இந்த மாநாட்டிற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

​முக்கிய அறிவிப்புகள் எதுவும் இருக்குமா?: கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள், புதிய திட்டங்கள், முக்கிய நிர்வாகிகள் நியமனங்கள் போன்ற சில புதிய அறிவிப்புகள் இந்த மாநாட்டில் வெளியாகும் என்று, த.வெ.க.வினர் எதிர்பார்க்கின்றனர்.

​மொத்தத்தில், இந்த மதுரை மாநாடு தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமையக்கூடும் என்று, அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களுக்கும், விஜய் அடுத்த படத்தை எப்படியெல்லாம் எதிர்பார்த்து காத்திருப்பார்களோ, அப்படி தான், இந்த மதுரை மாநாட்டையும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள்…

– அருள் வளன் அரசு

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *