தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் களம், மதுரை மாநகரத்தை நோக்கித் திரும்பியுள்ளது. நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, மா மதுரையில் நாளை திகம் பிரம்மாண்டமாக நடைபெறுது. இந்த மாநாடு, ஒரு சாதாரண அரசியல் கூட்டம் அல்ல, தமிழகத்தின் எதிர்காலத்தை எழுதப்போகும் ஒரு வரலாற்றுத் திருப்புமுனை என்றே அரசியல் விமர்சகர்கள் தற்போது கருத்து தெரிவிக்கிறார்கள்.
இந்த மாநாட்டின் முதல் விசயமே, முதல் சாரம்சமே.. தென் மாவட்டங்களில் கால் பதிக்கும் தளபதி விஜய்!
த.வெ.க.வின் முதல் மாநாடு வட தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவண்டியில் நடைபெற்றது. ஆனால், இரண்டாவது மாநாட்டிற்கு விஜய் தேர்ந்தெடுத்தது தென் மாவட்டங்களின் மையப்புள்ளியாகத் திகலக்கூடிய மதுரைதான். விஜய், மதுரையை ஏன் ஜுஸ் பண்ணாருனு பார்த்திங்கான.. தென் தமிழகத்தில் தனது அரசியல் பலத்தை நிரூபிக்கவும், இந்தப் பகுதியின் மக்களின் ஆதரவை முழுமையாகப் பெறவுமே விஜயோட முழு திட்டமாக இருக்கு. இதுதான் வெளிப்படையான உண்மை. அதாவது, மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில், எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே உள்ள பாரபத்தி பகுதியில கிட்டதட்ட 506 ஏக்கர் பரப்பளவில் இந்த மாநாடு நடைபெறுது.
தமிழகத்தில் நடந்த அரசியல் மாநாடுகளிலேயே இது மிகப்பெரிய பரப்பளில் நடைபெறுகிறது என்று, நம்ம நேர்த்து பேசின வீடியோவுல பார்த்தோம். இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மிக பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. முக்கியமாக, முதல் மாநாட்டில் எதுவேல்லாம் சொதப்பியதோ, அந்த விசயங்களை இந்த மாநாட்டில் சரி பண்ண வேண்டும் என்று விஜயோட அதிரடி உத்தரவா இருக்கு.. அதனால்தான் இந்த மாநாட்டில் உணவு, குடிநீர், கழிவறை வசதி என்று பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருக்கு. இந்த பொறுப்புகளை எல்லாம் தனியாக கவனித்துக்கொள்ள இதற்கு என்று தனியாக தொண்டர்களையும் பிரத்யேகமாக ஏற்பாடு செஞ்சிருக்காங்க..
இந்த மாநாட்டில் முக்கியமாக கவனிக்ககூடிய ஒரு விசயம் பேனர்களில் அரசியல் சிக்னல்: மதுரைனாலே அப்படிதான்.. பேனர் அரசியலுக்கு பெயர் போனது மதுரை. இந்த முறை பேனர் அரசியலில் விஜயும் இடம் பிடித்திருக்கிறார். அதாவது, ‘வைரத்தை இழந்துவிட்டோம்.. தங்கத்தை இழந்துவிடமாட்டோம்..’ என்று வைக்கப்பட்ட பேனர் தற்போது அரசியலில் பேசும் பொருளாக மாறிவிட்டது.
அதாவது, தமிழக அரசியல் களத்தில் மதுரையில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் பேசுபொருளாக மாறிவிட்டன. ஒரு பேனரில், மறைந்த நடிகர் விஜயகாந்த் அவர்கள், விஜய் தோள் மீது கைபோட்டிருப்பது போன்ற ஒரு புகைப்படம் இடம் பெற்று இருக்கு. அந்த பேனரில், “வைரத்தை இழந்துவிட்டோம்.. தங்கத்தை இழந்து விடமாட்டோம்..” என்ற உணர்ச்சிபூர்வமான வாசகம் இடம் பெற்றிருக்கு.
இந்த வாசகத்துக்குப் பல அரசியல் அர்த்தங்கள் இருக்கு. விஜயகாந்த் அவர்களை ‘வைரம்’என்று குறிப்பிட்டு, அவரைப் போன்ற ஒரு ஆளுமை தமிழகத்துக்கு தேவை. அவர், இப்போது நம்மிடம் இல்லை. ஆனால், அவருக்குப் பிறகு, தமிழகத்தின் அரசியல் அரியணைக்கு ஒரு ‘தங்கம்’ கிடைத்து உள்ளார். அந்தத் தங்கம் விஜய்தான் என்பதை இந்த பேனர் வெளிப்படையாக அரசியல் பேசியிருக்கிறது.
விஜயகாந்த் மற்றும் விஜய் இருவருமே மக்களின் ஆதரவை நேரடியாகப் பெற்று, எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாமல் சினிமா துறையிலிருந்து வந்தவர்கள். எனவே, இந்த ஒப்பீடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
வாகை சூடும் வரலாறு திரும்புகிறதா? அப்படினு ஒரு கேள் இந்த இடத்துல இருக்கு..
அதாவது மாநாட்டு திடலில் அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் படங்களுடன் விஜய்யின் கட் அவுட் இருப்பது போல் நிறுவப்பட்டு உள்ளது. அதில், “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது” என்ற வாசகமும் இடம் பெற்றிருக்கிறது.
அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் இருவருமே திராவிட அரசியல் பாரம்பரியத்தில், பெரியாரின் கருத்துக்களைப் பரப்பி, மக்களுக்குத் தொண்டாற்றி ஆட்சியைப் பிடித்தவர்கள்.
அதேபோல, தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளின் அரசியலுக்குப் பிறகு, ஒரு புதிய அரசியல் சக்தியாகத் த.வெ.க.வும், அதன் தலைவர் விஜய்யும் உருவாகியுள்ளனர் என்பதை இந்த கட் அவுட் மறைமுகமாகச் சொல்கிறது. சினிமா துறை ஒரு அரசியல் பாதைக்கான நுழைவாயில் என்பதை அண்ணா, எம்.ஜி.ஆர் நிரூபித்தார்கள். அதே வரலாற்றை விஜய் திரும்ப எழுதுவார் என்பதுதான் இந்த வாசகத்தின் பொருள்.
மாநாட்டின் முக்கியத்துவம்:
இந்த மாநாடு, த.வெ.க.வின் அரசியல் கொள்கைகள், கூட்டணி வியூகங்கள் மற்றும் விஜய்யின் தலைமைப் பண்பை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய தளமாக இருக்கும். கடந்த சில மாதங்களாக, கட்சியின் நிர்வாகிகள் சந்திப்பு, புதிய நிர்வாகிகள் நியமனம், மக்கள் சந்திப்பு எனப் பல்வேறு களப்பணிகளை விஜய் மேற்கொண்டு வருகிறார்.
இந்த மாநாட்டின் மூலம், தனது அரசியல் பயணத்தின் அடுத்த கட்டத்தை அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் தற்போதைய தி.மு.க. அரசின் மீது விஜய் முன்வைக்கப் போகும் விமர்சனங்கள், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வுக்கு அவர் கொடுக்கும் அழுத்தம், 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்த தனது திட்டம் எனப் பல முக்கிய விஷயங்கள் இந்த மாநாட்டில் தெளிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மதுரையில் த.வெ.க.வினர் வைத்துள்ள பேனர்களும், கட் அவுட்டுகளும் ஒரு செய்தியைத் தெளிவாகச் சொல்கிறது. விஜய் தனது அரசியல் பயணத்தின் தீவிரத்தை உணர்த்தத் தொடங்கிவிட்டார்.
விஜய், ஒரு புதிய அரசியல் சக்தியாக உருவெடுக்கிறார் என்பதையும், தமிழக அரசியல் களம் இனி பரபரப்பாக இருக்கும் என்பதையும் இது உணர்த்துகிறது.
இந்த மாநாடு தமிழக அரசியல் வரலாற்றில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.. விஜயின் மாநாடு பற்றி நீங்கள் என்ன நினைக்குறீங்க என்பதையும் கீழே கமெண்ட்டுல சொல்லுங்கள்..
– அருள் வளன் அரசு