போதையில் மலைப்பாம்போடு சேட்டையில் ஈடுபட்ட இளைஞனின் காலை பாம்பு சுற்றியவுடன் “என்னை காப்பாதுங்க.. என்னை காப்பாதுங்க..” என்று, அலறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த கோணனூர் கிராமத்தைச் சேர்ந்த இளவரசன் என்ற இளைஞர், நேற்றைய தினம் மது அருந்தி உள்ளார். இதனையடுத்து, அவருக்கு போதை தலைகேறியதால், திடீரென கோணல் புத்தி ஆனது போல் மலைப்பாம்பை கையில் எடுத்து தோளில் போட்டுக்கொண்டு, “ஒன்லி 10 ரூபாய்” என்று, கூவி கூவி விற்று குரங்குச் சேட்டையில் ஈடுபட்டு இருக்கிறார்.
அந்த வழியாக சென்றவர்கள் “ஏண்டா இப்படியெல்லாம் பண்ற?” என்று கேட்டதற்கு, “நாளைக்கு நா பேப்பர்ல வரணும்.. அது வரைக்கும் விடிய விடிய இப்படிதான் நான் நிப்பேன்” என்று, கூறிக்கொண்டு அந்த மலை பாம்பை சித்ரவதை செய்யும் வகையில் அழுத்திப் பிடித்துக்கொண்டு அட்ராசிட்டி செய்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, அங்குள்ள வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில், விரைந்து வந்த அதிகாரிகள் போதை ஆசாமியிடம் இருந்து அந்தப் பாம்பை மீட்டனர். ஆனால், அதிகாரிகள் வருவதற்குள் போதையில் மலைப்பாம்போடு சேட்டையில் ஈடுபட்ட இளையனின் காலை மலை பாம்பு சுற்றி உள்ளது. இதனால் பதறிப்போன அந்த போதை ஆசாமி “என்னை காப்பாதுங்க.. என்னை காப்பாதுங்க..” என்று, அலறியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகே அதிகாரிகள் வந்து பாம்பை மீட்டனர்.
இதனிடையே, தன்னை பெரிய பாம்பு பிடி வீரர் என்று நினைத்துக்கொண்டு, மலைப்பாம்போடு மது போதையில் டீல் பண்ணும் இந்த இளைஞரின் வீடியோ, தற்போது இணையதளத்தில் ட்ரோல் மெட்டீரியல் ஆகி வைரலாகி வருகிறது.