Mon. Dec 23rd, 2024

கொரோனாவைப் போல வெயிலால் பாதிக்கப்படுவார்களுக்கு தனி வார்டு!

By Aruvi May5,2024

அரசு மருத்துவமனைகளில் கொரோனாவைப் போல வெயிலால் பாதிக்கப்படுவார்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெயிலானது சதமதித்து உள்ளது. வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், வெயிலை பொறுத்துக் கொள்ள முடியாமல் மக்கள் வெப்ப தாக்கத்தால் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

நேற்று முதல் ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்திரிவெயிலும் தொடங்கியது. சென்னையில் நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் ஆகிய பகுதிகளில் 100 டிகிரியை தாண்டியே வெப்பத்தின் அளவு பதிவாகி வருகிறது.

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேலை காரணமாக வெளியில் செல்லும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அப்படி செல்லும் போது அவர்களுக்கு நீர்ச்சத்து குறைவு ஏற்படுகிறது. வெயிலின் தாக்கத்தால் உடலில் இருந்து அதிக வியர்வை வெளியேறும் போது உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றக்குறை ஏற்படுகிறது.

இதனால் அதிக தாகம், தலை வலி, உடல் சோர்வு, தலை சுற்றல், தசைப்பிடிப்பு, மயக்கம், வயிற்றுப்போக்கு, அஜீரணக் கோளாறு மற்றும் வலிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றது. இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும் போது சிலர் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்கின்றனர். இதனால், அவர்களுக்கு பக்கவாதம், மூளை சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுகிறது.

எனவே, வெப்பத்தால் உடல் நலக்குறைவு ஏற்படும் பட்சத்தில் அவர்கள் உடனடியாக டாக்டரை உடனே அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள மருத்துவத்துறை அறிவுறுத்தி வருகிறது. கத்திரி வெயிலின் தாக்கத்தால் வெப்பம் சார்ந்த நோய்கள் அதிகமாக ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தற்போது உயிர் இழப்பும் ஏற்பட்டு உள்ளது.

இதன் காரணமாக, சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை, ராஜுவ் காந்தி அரசு மருத்துவமனைகளில் வெயிலால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு ஏற்படுத்தப்பட்டு, அதில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

வெயிலுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கபப்ட்டு உள்ளது. அந்த வகையில், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு வார்டிலும் 10 படுக்கைகள் வீதம் மொத்தம் 20 படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு வெப்பத்தின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 10-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியில் ஏடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இதே போல், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகள் கொண்ட தனி வார்டு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வார்டில் 3 வெண்டிலேட்டர் கருவிகளும், ரத்த பரிசோதனை உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வெப்பத்தால் பாதிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக தீவிர சிகிச்சைப் பிரிவில் 5 படுக்கைகள் தனியாக ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த தனி வார்டுகளில் அரிசி கஞ்சி, ஓ.ஆர்.எஸ். எனப்படும் உப்பு – சர்க்கரை கரைசல் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

By Aruvi

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *