சாவு ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததை கண்டித்த கர்ப்பிணியும், அவரது கணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் தொடர்ச்சியாக, சுடுகாட்டில் இரு தரப்பினரும் மோதிக் கொண்ட நிலையில், ராகவா லாரன்ஸ் பட நடிகர் மற்றும் டிவி நடிகர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை ஓட்டேரி பஷீம் முதல் தெருவைச் சேர்ந்த சதீஷ் என்பவரின் தந்தை குமார் இறந்த நிலையில், அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது. அதன்படி, ஓட்டேரி பாசியம் ரெட்டி தெருவில் இருந்து, ஓட்டேரி சுடுகாடு நோக்கி இறுதி ஊர்வலம் சென்று கொண்டிருந்தது.
அந்த நேரம் பார்த்து ஜெயச்சந்திரன் மற்றும் அவரது 4 மாத கர்ப்பிணியான மனைவி பவித்ராவுடன் ஆட்டோவில் அவர் புரசைவாக்கத்திலிருந்து ஓட்டேரி நோக்கி சென்று உள்ளார்.
அப்போது, சதீஷின் நண்பர்கள் பட்டாசு வெடித்து உள்ளனர். அப்போது, மனைவி 4 மாத கால கருவுற்று இருப்பதால், “சாலையில் பட்டாசு வெடிக்க வேண்டாம்” என்று, அவர் கேட்ட உள்ளார். ஆனால், இதற்கு ஏற்க அவரகள் மறுத்து உள்ளனர். இதனால், ஜெயச்சந்திரனுக்கும் சதீஷின் நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டடு உள்ளது. அப்போது, ஒருவரை ஒருவர் கல்லால் தாக்கி கொண்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதில், ஜெயச்சந்திரன் அவரது மனைவி 4 மாத கர்ப்பிணியான பவித்ராவுக்கும் காயம் அடைந்தனர். இதனால், கடும் ஆத்திரமடைந்த ஜெயச்சந்திரன் தனது நண்பர்களை வரவழைத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து ஓட்டேரி சுடுகாட்டில் வைத்து கை மற்றும் கட்டையால் தாக்கியதில் சசிதரன் மற்றும் கோபி ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த மோதல் தொடர்பாக தலைமைச் செயலக காலனி போலீசில் இரு தரப்பினரும் மாறி மாறி புகார் அளித்தனர். ஜெயச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் சதீஷ், சரவணன் உள்ளிட்டோர் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அதே போல, சசிதரன் கொடுத்த புகாரின் பேரில் ஜெயச்சந்திரன் நண்பர்களான சஞ்சய், ஜெகதீஷ்வரன், பிரவீன், கவுதம் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த மோதல் தொடர்பாக சதீஷ், சரவணன், சஞ்சய், ஜெகதீஷ்வரன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
போலீஸ் விசாரணையில் கைதான சதீஷ் திரைப்பட துணை நடிகர் என்பது தெரிய வந்தது. அதுவும், நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா, விஜய் ஆண்டனி நடித்த கோடியில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து உள்ளார். அத்துடன், சதீஷின் சகோதரர் சரவணன் செம்பருத்தி, கயல் உள்ளிட்ட டிவி தொடர்களில் நடித்து உள்ளார் என்பது தெரிய வந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.