Mon. Dec 23rd, 2024

“கள்ளக்குறிச்சி விஷச்சாராய இறப்பை வைத்து, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதற்றத்தை ஏற்படுத்தி, குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி மோசமான நாகரிகமற்ற அரசியலை கையில் எடுத்துள்ளதாக” சுகாதார துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷ சாராயம் அருந்தி பாதிக்கப்பட்ட 17 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக அங்கு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன், “கள்ளக்குறிச்சியில் பாதிக்கபட்டவர்கள் 168 பேர் என்றும், அதில் 9 பெண்கள், 1 திருநங்கை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டதாக” கூறினார்.

“கள்ளக்குறிச்சியில் ஆய்வு செய்து சிகிச்சை அளித்து வருவது குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து, சிகிச்சை பெற தயங்கியவர்கள் 55 பேர் மருத்துவமனை அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால், 168 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும்” அவர் கூறினார்.

“விஷ சாராயம் அருந்தி இதுவரை 48 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், உயிரிழந்த குடும்பத்தாருக்கு இல்லங்களுக்கே சென்று 10 லட்சம் நிதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கியதாகவும்” தெரிவித்தார்.

“கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு பிற மாவட்டத்தில் இருந்து 67 மருத்துவர்கள் அழைத்து வரப்பட்டு மருத்துவம் 24 மணி நேரமும் பார்த்து வருவதாகவும்,

கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 600 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக உள்ளதாகவும், கூடுதலாக 50 படுக்கைகளும் உள்ளதாக” குறிப்பிட்டார்.

“இதில் சேலத்தில் 31 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதில் 8 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், போதிய மருந்துகள் இல்லை என எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளதாக” சுட்டிக்காட்டிய அமைச்சர், “கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் விஷ சாராயம் குறித்து பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பதற்றத்தை ஏற்படுத்தி, குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் மோசமான நாகரீகமற்ற அரசியலை கையில் எடுத்துள்ளதாகவும், மருந்து கையிருப்பு இல்லை என கூறுயிருக்கிறார். ஆனால், அந்த மருந்துகள் போதிய அளவு உள்ளதாகவும், இதில்

4 கோடியே 42 மாத்துரைகள் கையிருப்பு உள்ளது என்றும், எதிர்கட்சிகள் இதில் அரசியல் செய்யக்கூடாது” என்றும், கேட்டுக்கொண்டார்.

“விஷ சாராய பாதிப்பால் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு எத்தனால் ஊசி ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வழங்கப்பட்டு வருவதாகவும், விஷ சாராயம் அருந்தியவர்கள் மருத்துவமனைக்கு வர தயக்கம் காட்டியதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *