Mon. Dec 23rd, 2024

“உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் நீதான்!” வெட்கப்பட்ட விராட் கோலி..

“உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் நீதான்!” என்று, வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் வெஸ் ஹாலை புகழாரம் சூட்டிய நிலையில், விராட் கோலி வெட்கப்பட்டு சிவந்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டிக்கு முன்னாபக இந்திய அணியினர் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் வெஸ் ஹாலை சந்தித்தனர். அப்போது, விராட் கோலியுடன் அவர் சிறிது நேரம் உரையாடினார்.

அந்த தருணத்தில் தான், “உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் நீதான்” என்று, வெஸ் ஹால், விராட் கோலியிடம் புகழரம் சூட்டி இருக்கிறார்.

அதாவது, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வரலாற்றிலயே ஆகச் சிறந்த சிறந்த வேகப்பந்து வீச்சாளர் தான் வெஸ் ஹால். பார்படாஸை சேர்ந்த இவர், அடிப்படையில் ஒரு விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆவார்.

வெஸ் ஹால், தொடக்கத்தில் தனது உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடிய போது, ஒரு முறை முன்னணி வேகப்பந்து வீச்சாளருக்கு காயம் ஏற்பட்டதால் , வேகப்பந்து வீச்சாளராக வெஸ் ஹால் அவதாரம் எடுத்தார் என்பது கடந்த கால கிரிக்கெட் வரலாறு.

வேகப்பந்து வீச்சு பிடித்துப் போகவே, விக்கெட் கீப்பிங்கை அப்படியே பாதிலியிலேயே விட்டு விட்டு, முழு நேரமாகவே வேகப்பந்து வீச்சில் தனது முழு கவனத்தையும் செலுத்தத் தொடங்கினார். 48 டெஸ்டுகளில் விளையாடிய வெஸ் ஹால், 26.38 என்ற சராசரியில் 192 விக்கெட்டுகள் கைப்பற்றினார் என்பது, அவரது அசைக்க முடியாத சாதனையாக இருக்கிறது.

சக வேகப்பந்து வீச்சாளர் சார்லி கிரிஃபித்துடன் இணைந்து எதிரணி பேட்ஸ்மேன்களில் விலா எலும்புகளை உடைப்பதில் வெஸ் ஹால் புகழ் பெற்றவர் என்று கூறிகிறது கிரிக்கெட் வரலாறு.

குறிப்பாக, வெஸ் ஹால் பந்து வீச ஓடி வரும் வேகத்தைப் பார்த்தே நிறைய பேட்ஸ்மேன்கள் அச்சத்தில் தடுமாறுவதை இப்போதும் யூடுயூப் வீடியோக்களில் பார்க்க முடிகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பார்படாஸ் நாட்டில் விளையாட்டுத் துறை அமைச்சராக வெஸ் ஹால் பணியாற்றினார். தனது வாழ்க்கை அனுபவங்களை Answering the call என்ற பெயரில் சுயசரிதையாகவும் அவர் எழுதி இருக்கிறார்.

இந்த நிலையில் தான், டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடுவதற்கு இந்திய அணி பார்படாஸ் சென்ற போது, நிகழ்ந்த சந்திப்பில் “உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் நீதான்!” என்று, வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் வெஸ் ஹால், விராட் கோலியிடம் புகழாராம் சூட்டியிருக்கிறார். அப்போது, விராட் கோலி வெட்கப்பட்டு கூச்சத்தில் நெளிந்திருக்கிறார்.

மிக முக்கியமாக, 86 வயதான கிரிக்கெட் ஜாம்பவான் வெஸ் ஹால், விராட் கோலியிடம் காட்டிய பரிவும், அன்பும், அக்கறையும் அதற்கு விராட் கோலி கொடுத்த பதில் அன்பும், மரியாதையும் சமூக வலைதளங்களில் தற்போது பெரும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *