“என் நெஞ்சில் குடியிருக்கும்” என்ற வார்த்தையை சொந்தம் கொண்டாடிய நடிகர் விஜயை இன்று, ஊரே கொண்டாடி வருகிறது என்றால், அது மிகையாகாது. ஆம், நடிகரும், தவெக தலைவருமான விஜய் பிறந்தநாள் இன்று அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, பல்வேறு தரப்பினரும் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
அதன்படி, நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு “THE GOAT” படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு Seven Screen Studio பட நிறுவனம், விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளது. நடிகர் விஜய்யின் 50 வது பிறந்தநாளை முன்னிட்டு ”GOAT” படத்தின் டீசர் இணையத்தில் தற்போது பெரும் வைரல் ஆகி வருகிறது.
அதே போல், “THE GOAT” படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
அவரைப் போலவே, மநீம தலைவர் கமல்ஹாசன் தவெக தலைவர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான, நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார். சீமான் தெரிவித்து உள்ள வாழ்த்துச் செய்தியில், “எனது அன்புத் தளபதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று, கூறியுள்ளார்.
டான்ஸ் மாஸ்டரும், இயக்குநரும், நடிகருமான பிரபுதேவா நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
திரைப்பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
நடிகை வரலட்சுமி விரைவில் திருமணம் செய்துக் கொள்ள இருக்கும் நிலையில், சமீபத்தில் விஜய்யை சந்தித்த ஒரு போட்டோவை பதிவிட்டு, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
அதே போல், தமிழ்கத்தின் பல்வேறு இடங்களில் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்களால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் வைரல் ஆகி வருகிறது.
அதே நேரத்தில், விஜய்யின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு, “துப்பாக்கி” திரைப்படம் இன்று ரீ-ரிலீஸாகி உள்ளது. ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், 2012 ஆம் ஆண்டு வெளியான “துப்பாக்கி” திரைப்படம், விஜய் கேரியரில் சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்திருந்தது. “துப்பாக்கி” திரைப்படம் இன்று ரீ-ரிலீஸாகி உள்ள நிலையில், அவரது ரசிகர்கள் திரையரங்கத்திற்கு சென்று கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக, “எனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுபவர்கள் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை நேரடியாக சென்று வழங்குங்கள்” என்று, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்களுக்கு நடிகர் விஜய் நேற்றைய தினம் அதிரடியாக உத்தரவு பிறபித்திருந்தது குறிப்பிடத்தக்கது.