கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் 2 வது நாளாக இன்றும் கருப்புச்சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 55 ஆக அதிகரித்து உள்ளது.
தமிழக சட்டப்பேரவை மானியக்கோரிக்கைக்கான விவாதம் இன்றும் 2 நாளாக தொடங்கியது. அப்போது, கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர இன்றும் கருப்புச்சட்டை அணிந்து வருகை தந்தனர்.
சட்டப்பேரவை தொடங்கிய சில நிமிடத்திலேயே இன்றைய தினமும் அதிமுகவினர் “கேள்வி நேரத்தை ஒத்திவைக்க வேண்டும்” என்று, அதிமுகவினர் வலியுறுத்தி கடும் அமளியில் ஈடுபட்டனர். ஆனால், இதனை ஏற்க சபாநாயகர் மறுத்த நிலையில், நிராகரித்தார். இதன் காரணமாக, அதிமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து இன்றும் வெளிநடப்பு செய்தனர்.
அப்போது பேசிய சபாநாயகர் அப்பாவு, “சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் மீண்டும் இது போல் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்பேன்” என்று, எச்சரிக்கை விடுத்தார்.
வெளிநடப்பு செய்தபிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,
“கள்ளச்சாராய மரணம் இல்லை என ஆட்சியர் அளித்த தவறான தகவலால்தான் மக்கள் மருத்துவமனைக்கு செல்ல தயக்கம் காட்டினர். அதன் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக” பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
மேலும், “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் அருந்தி மரணம் அடைந்தது குறித்து எதிர்க்கட்சி என்ற முறையில், மக்களுக்கு நிதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே மக்களின் பிரச்சினையை சட்டமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான், நாங்கள் பேச அனுமதி கேட்டோம். ஆனால், சட்டப்பேரவை தலைவர் அனுமதி தர மறுத்துவிட்டார் என்பதால் நாங்கள் வெளிநடப்பு செய்தோம்” என்று, எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்தார்.
குறிப்பாக, “மாநில அரசு விசாரித்தால் மக்களுக்கு நீதி கிடைக்காது என்றும், கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு பிரச்சனைகள் குறித்து பேச அனுமதிக்க வேண்டும் என்று, நாங்கள் வலியுறுத்தியதாகவும் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்தார்.
முக்கியமாக, “கள்ளக்குறிச்சி சாராய விவகாரத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரே உண்மையை மறைத்து பேசும் போது, எப்படி உண்மையான விசாரணை நடைபெறும் என்றும், அதனால் சிபிஐ விசாரணை வேண்டும்” என்றும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.