நடிகர் சிவகார்த்திகேயனுக்கு “உழவர்களின் தோழன் விருது” வழங்கப்பட்டுள்ளது, ஒட்டுமொத்த திரைத்துறையின் கவனத்தையும் பெற்று உள்ளது.
தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் “சினிமா விருதுகள்” தான் பிரபலமாக இருந்து வருகிறது. அதன்படி, சினிமா நட்சத்திரங்களுக்கு ஆண்டு தோறும் பல்வேறு சினிமா விருதுகள் தனியார் நிறுவனங்களால் வழங்கப்பட்டு “சிறந்த நடிகர், நிறந்த நடிகை, நிறந்த வில்லன், சிறந்த பாடகர், சிறந்த பாடகி” என பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இல்லாத ஒரு புதிய வகையில், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு “உழவர்களின் தோழன் விருது” தற்போது வழங்கப்பட்டு உள்ளது.
அதாவத, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ‘தேசிய நெல் திருவிழா’ நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார்.
இவ்விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் , “நம்மாழ்வார் ஐயாவை தொடர்ந்து, நெல் ஜெயராமன் ஐயாவும் சத்தமே இல்லாமல் பெரிய பெரிய சாதனை படைத்து உள்ளார். 174 பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்து அதனை எல்லோருக்கும் பயன்படும்படி செய்திருப்பது மிகப் பெரிய புரட்சி” என்று பேசினார்.
அத்துடன், “ இந்த விவசாயம் சார்ந்த இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது எனது கடமை என்றும், “உழவர்களின் தோழன் விருது” பெற்றதில் எனக்கு தான் பெருமை” என்றும், நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி பொங்க பேசினார்.
இதனிடையே, நடிகர் சிவகார்த்திகேயனுக்கு “உழவர்களின் தோழன் விருது” வழங்கப்பட்டுள்ளது, ஒட்டுமொத்த திரைத்துறையின் கவனத்தையும் பெற்று உள்ள நிலையில், அவரது ரசிகர்கள் மத்தியில் புதிய உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.