யுவன் சங்கர் ராஜா இசையில் “சின்ன சின்ன கண்கள்” எனத் தொடங்கும் இந்தப் பாடலை நடிகர் விஜய் மற்றும் மறைந்த பாடகி பவதாரிணி குரல்களில் உருவாக்கப்பட்டு உள்ளது.
மறைந்த பாடகி பவதாரிணியின் குரலை AI டெக்னாலஜியை பயன்படுத்தி பாடலை உருவாக்கப்பட்டு உள்ளது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. மெலடியாக உருவாக்கி உள்ள இப்பாடலின் வரிகளை, கபிலன் வைரமுத்து எழுதி உள்ளார்.
நள்ளிரவு 12 மணிக்கு விஜய்யின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. அந்த வரிசையில், தற்போது “தி கோட்” படத்தின் செகண்ட் சிங்கிள் தற்போது வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை இப்பாடல் பெற்று உள்ளது.
முன்னதாக, நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு “THE GOAT” படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு Seven Screen Studio பட நிறுவனம், விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தது. அதாவது, நடிகர் விஜய்யின் 50 வது பிறந்தநாளை முன்னிட்டு, “GOAT” படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி தற்போது வரை பெரும் வைரல் ஆகி வருகிறது.
அதே போல், நடிகர் விஜய்யின் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு, “துப்பாக்கி” திரைப்படம் நேற்று முன் தினம் ரீ-ரிலீஸாகி ஆனது. ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், 2012 ஆம் ஆண்டு வெளியான “துப்பாக்கி” திரைப்படம், விஜய் கேரியரில் சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்திருந்தது. “துப்பாக்கி” திரைப்படம் ரீ-ரிலீஸாகி ஆன நிலையில், அவரது ரசிகர்கள் திரையரங்கத்திற்கு படையெடுத்த வண்ணம் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.