ஊழலுக்கு எதிரான “இந்தியன்-2” படத்தில், குஜராத் பதிவெண் கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் கார் பயன்படுத்தப்பட்டது ஏன் என்பது குறித்து இயக்குனர் ஷங்கர் சொல்ல அளித்து உள்ளார்.
“இந்தியன்-2” படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாக உள்ள நிலையில், சென்னை வடபழனி போரம் மால் IMAX திரையரங்கத்தில் பத்திரிகையாளர் மற்றும் படக்குழுவினருக்கு மட்டும் “இந்தியன்-2” டிரைலர் ஒளிபரப்ப பட்டது.
படத்தின் டிரைலரில், இந்தியன் தாத்தாவின் பல்வேறு மாறுபட்ட கெட்டப்பில் கமல் மிரட்டியிருந்தார். முக்கியமாக, மறைந்த நடிகர் விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு ஆகியோரும் டிரைலரில் வருகிறார்கள்.
நடிகர் கமல்ஹாசன், இசையமைப்பாளர் அனிருத், நடிகர்கள் பாபி சிம்ஹா உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் என பலரும் பங்கேற்றனர். அதன் தொடர்ச்சியாக, “இந்தியன்-2” பட குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய இயக்குனர் ஷங்கர், ‘ “இந்தியன்-1” படத்துக்கு 40 நாட்கள் கமல்ஹாசன் ஸ்பெஷல் மேக்கப் போட்டார் என்றும், “இந்தியன்-2” வுக்கு 70 நாட்கள் ஸ்பெசலாக மேக்கப் போட்டார் ‘ என்றும், தெரிவித்தார்.
அதன்படி, “தினமும் 3 மணி நேரம் மேக்கப் போடப்படும் என்றும், அதை கலைக்க அதிக நேரம் எடுக்கும் என்றும், அப்போது கமல் அவர்களால் சரியாக சாப்பிட கூட முடியாது என்றும், மற்றவர்களை விட காலையில் முன்னதாகவே வந்து, அனைவர் சென்ற பின் கடைசியாக கமல் செல்வார்” என்றும், இயக்குனர் ஷங்கர் பேசினார்.
முக்கியமாக, ‘ஊழலுக்கு எதிரான “இந்தியன்-2” படத்தில், குஜராத் பதிவெண் கொண்ட ரோல்ஸ்ராய்ஸ் கார் சீன் வருதே? என்ன சொல்ல வர்றீங்க?’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்து பேசிய இயக்குனர் ஷங்கர், “இந்தியன்-2” கதை , தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலத்திலும் நடப்பதால், அந்த சீன் இருக்கிறது” என்றும், ஷங்கர் விளக்கம் அளித்தார்.
கமல்ஹாசன் பேசும்போது, ‘ “இந்தியன்-2” பட வரக்காரணமாக இருந்த உதயநிதிக்கு நன்றி என்றும், அவர் நண்பராக, ரசிகராக படத்துக்கு ஆதரவு கொடுத்தார்” என்றும், புகழாரம் சூட்டினா்ர.
மேலும், “28 ஆண்டுகளுக்கு பிறகு “இந்தியன்-2” வருகிறது என்றும், இந்தியன் முதற்பாகத்தில் இருந்த அதே ஊழல், அரசியல் வாதிகள் நிலை இப்போதும் இருக்கிறது என்றும், இதற்கு மக்களும் ஒரு காரணம்” என்றும், டிரைலர் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேசினார்.