தமிழக சட்டப் பேரவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக இன்று 19 புதிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
அதன்படி,
– ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கருக்கு புதிய விடுதிகள் கட்டுதல்
– விடுதி மாணாக்கருக்கு ஒருங்கிணைந்த சமையலறை மூலம் உணவு வழங்குதல் அமுத சுரபி திட்டத்தை விரிவுபடுத்தல்
– விடுதி மாணாக்கருக்கு படுக்கை உபகரணங்கள் அடங்கிய பட்டகம் வழங்குதல்
– பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகளை பழங்குடியினர் தேவைகளின் அடிப்படையில் மறு சீரமைத்தல்
– பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயலும் மாணாக்கரின் தனி திறனை வளர்த்துக் கொள்ள திறன் சார்ந்த திட்டங்கள்
– உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாணாக்கருக்கு உயர்திறன் ஊக்கத்திட்டம்
– முழு நேர முனைவர் பட்டப்படிப்பிற்கான கல்வி ஊக்க தொகை திட்டத்தில் பயன் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்
– தொல்குடியினர் புத்தாய்வுத் திட்டம்
– நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்
– பழங்குடியினர் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திட புதிய பொருளாதார முன்னேடுப்பு திட்டங்களை செயல்படுத்துதல்
– வன உரிமைச் சட்டத்தை விரைவாகவும் திறன் படவும் செயல்படுத்த செயல் திட்டம்
– முதலிப்பாளையம் மற்றும் ஈங்கூர் தொழிற்பேட்டை அலகுகளை புனரமைத்தல்
– வீடற்ற பழங்குடியினருக்கு வீடுகள் கட்டித் தருதல்
– பழங்குடியினர் குடியிருப்புகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தன்னிறைவு அடையச் செய்தல்
– ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்திற்கான நெறிமுறை மற்றும் பயிற்சி
– பழங்குடியின மக்களின் குடியிருப்புகளை இணைப்பதற்காக அணுகுசாலை வசதிகளை ஏற்படுத்துதல்
– ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களை தொழில் முனைவோராக ஊக்குவிக்கும் வகையில் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடத்துதல்.
– ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினரின் வாழ்வியல் விழா
– ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்திட்டங்களின் தரவுகளை மின் பதிப்பாக்கம் செய்தல்.
ஆகிய 19 திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.