“நீட் விலக்கு தேவை” என்று, நடிகர் விஜய் பேசியது சரியா? தவறா? என்ற பட்டிமன்றமே சமூக வலைத்தளங்களில் நடைபெற்று வருகிறது.
தளபதி’ விஜய்-யின் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெறும் கல்வி விருது வழங்கும் விழா சென்னையில் 2 வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே தொடங்கியது. இவ்விழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் நடிகர் விஜயிடம் சான்றிதழும், பரிசும் பெற்று வருகின்றனர்.
அத்துடன் 10, 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் 2 வது கட்ட விழா தொடங்கிய நிலையில், விழா தொடங்கியதும் மாற்றுதிறனாளி மாணவி அருகே விஜய் அமர்ந்தார்.
அதன் தொடர்ச்சியாக மேடையில் பேசிய நடிகர் விஜய், “வந்திருக்கும் இளம் சாதனையாளர்கள், பெற்றோர்கள், த.வெ.க தோழர்கள், என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா, நண்பிகளுக்கு வணக்கம். நான் பேச வேண்டாம்னு நினைத்தேன். ஆனால், சில முக்கியமான விஷயத்தை பத்தி பேசப்போறேன்” என்று கூறிக்கொண்டு நீட் குறித்து பேச தொடங்கினார் நடிகர் விஜய்.
எடுத்த எடுப்பிலேயே “நீட் விலக்கு தேவை!” என்று, விஜய் சூளுரைத்தார்.
குறிப்பாக, “நீட் விலக்கு கோரி, தமிழக சட்டமன்றம் கொண்டு வந்த தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக ஏற்கிறேன்” என்றும், அவர் சூளுரைத்தார்.
மேலும், “நீட் தேர்விற்கு ஒன்றிய அரசு கால தாமதம் செய்யாமல், ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்றும்,
ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்வியை, மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்” என்றும்,நடிகர் விஜய் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.