Mon. Dec 23rd, 2024

கணவனை பிரிய காரணம்.. மாமியாரை கத்தியால் குத்திய கொல்ல முயன்ற மருமகள்!

கணவனை பிரிய காரணமாக இருந்த மாமியாரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற மருமகளால் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டு உள்ளது.

தலைநகர் சென்னை தி நகர் பகுதியில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னை தி நகர் பகுதியை சேர்ந்த 66 வயது மூதாட்டி பிரேமா என்பவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இளைய மகன் தனசேகருக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு சாமூண்டீஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்குப் பிறகு, தனசேகர் மற்றும் சாமுண்டீஸ்வரி ஆகியோர் இணைந்து கேளம்பாக்கத்தில் தனியாக வீடு ஒன்றை கட்டி உள்ளனர்.

இந்த நிலையில் தான. கடந்த 6 மாதங்களாக தனசேகர் மற்றும் சாமுண்டீஸ்வரிக்கு இடையே வீடு சம்மந்தமாக பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. அதன் தொடர்ச்சியாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின்னர் இருவரும் பிரிந்து உள்ளனர். அதன் தொடர்ச்சியாக இவர்களது விவகாரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கடந்த 27 ஆம் தேதி, சென்னை தி.நகர் வீட்டில் தனியாக மாமியார் பிரேமா இருந்த உள்ளார். அப்போது, சாமூண்டீஸ்வரி வீட்டிற்குள் புகுந்து கதவை மூடி உள்ளனர். பின்னர், பிரேமா மீது கத்தியால் குத்தி கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் காயமடைந்த பிரேமா, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், இது குறிதது பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என காவல் ஆணையர் அலுவலகத்தில் மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமா மற்றும் அவரது மகன் தனசேகர், “தாங்கள் புதிதாக கட்டிய வீட்டில் குடியேறிவிடலாம் எனவும், தனது வீட்டை மாற்றிக்கொடுக்கும் படியும், தொடர்ச்சியாக தனது மனைவி தொல்லை கொடுத்ததால் விவாகரத்து வரை சென்றதாகவும், இதன் காரணமாக ஆத்திரத்தில் தனது தாய் பிரேமாவை வீடு புகுந்து சாமுண்டீஸ்வரி தாக்குதல் நடத்தி இருப்பதாகவும்” குற்றஞ்சாட்டினர்.

அத்துடன், “எனது மனைவி சாமூண்டீஸ்வரி, வங்கியில் பணியாற்றி வருவதால் அவர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாகவும்” அவர் குற்றம்சாட்டினார்.

இது குறித்து, காவல் நிலையத்தில் புகார் அளித்தால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், தனது தாயை தாக்கியதற்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும், அவரை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தி உள்ளார்.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *