Mon. Dec 23rd, 2024

யார் இந்த ஆம்ஸ்ட்ராங்? ஆம்ஸ்ட்ராங் உருவானது எப்படி? வளர்ந்தது எப்படி? கொலை செய்யும் அளவுக்கு நடந்தது? என்பதை பார்க்கலாம்.

ஆம்ஸ்ட்ராங், பார்ப்பதற்கு எப்போதுமே வெள்ளை ஆடையுடனே காணப்படுவார். வெள்ளை கால்சட்டை மற்றும் வெள்ளை சட்டை அணிந்து காணப்படுவார். தொழில் ரீதியாக வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.

கடந்த 2000 ஆம் ஆண்டு முதல், இவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானாராக மாறினார். அதன் தொடர்ச்சியாக, கடந்த 2006 ஆம் ஆண்டில் இவர் சென்னை மாநகராட்சி கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும், வழக்கறிஞராக இருந்ததால், பல வழக்குகளை எதிர்கொணட அவர் மீது நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளில் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், உத்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயாவதியை அழைத்து சென்னை அமைந்தக்கரையில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடத்தியதன் மூலம், அவர் அரசியலில் மேலும் புகழ் பெற்றார்.

குறிப்பாக, வழக்கறிஞர்கள் குழுவைச் சுற்றி, பல பட்டியலின மக்கள் மற்றும் தலித்துகள் சட்டம் படிக்க கல்வியில் பெரிதும் உதவினார். ஒவ்வொரு ஆண்டும், 100 -க்கும் மேற்பட்டோருக்கு சட்டக் கல்லூரிகளில் சட்டம் படிக்க உதவி செய்து வந்தார்.

மிக முக்கியமாக, கடந்த சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ஆம்ஸ்ட்ராங், பெரும் தோல்வியடைந்தார். ஆம்ஸ்ட்ராங்கிற்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். என்றாலும், சில கட்டபஞ்சயத்துகளில் அவர் ஈடுபட்டு வந்தார் என்றும், அவரைச் சுற்றி எப்போதும் வழக்கறிஞர்கள் கூட்டம் மற்றும் நண்பர்கள் கூட்டம் புடை சூழவே இவர் இருப்பார் என்றும், ஒரு சூழலில் கூட இவர் தனியாக எங்கு காணப்பட்டதில்லை என்றும் கூறப்பட்டது. அப்படி இருந்தும், அவரை தீவிரமாக கண்காணித்து நோட்டமிட்ட மர்ம கும்பல், அவர் கையில் துப்பிக்கி இல்லை என்பதையும், அவர் தினமும் இரவு நேரத்தில் எங்கு வந்து செல்கிறார் என்பதை தெரிந்துகொண்டு, அவரை கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்து உள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட நிலையில், ஒரே அடியாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்து 4 நேரத்தில் 8 பேர் கைதாகி இருக்கிறார்கள்.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *