Mon. Dec 23rd, 2024

“ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுப்பேன்” சென்னையின் புதிய கமிஷ்னர் அருண் அதிரடி..

“ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுப்பேன்” என்று, புதிதாக பொறுப்பேற்றுள்ள சென்னை மாநாக காவல் ஆணையர் அருண் அதிரடியாக பேசி உள்ளார்.

ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் சரியான நடவடிக்கை காவல் துறை எடுக்கவில்லை என்றும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்றும் எதிர்கட்சிகள் மாறி மாறி குற்றம்சாட்டின. இதன் விளைவாக சென்னை போலீஸ் கமிஷ்னராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக மாற்றப்பட்டார்.

அதன்படி, சென்னையின் புதிய காவல் ஆணையராக ஏடிஜிபி அருண் ஐ.பி.எஸ் இன்று பொறுப்பேற்றார். அதாவது, 110 வது சென்னை காவல் ஆணையராக ஏடிஜிபி அருண் இன்று கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்தித்த சென்னையின் புதிய கமிஷ்னர் அருண், “சென்னை மாநகரத்திற்கு நான் புதிதல்ல, சென்னை காவல் துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி உள்ளேன்” என்று, குறிப்பிட்டார்.

அத்துடன், “ரவுடிசத்தை கட்டுப்படுத்துவது, சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பது, குற்றத்தடுப்பு நடவடிக்கைகள், போக்குவரத்தில் இருக்கக்கூடிய சிக்கல்கள் உள்ளிட்டவற்றிற்கு முன்னுரிமை கொடுப்பேன்” என்றும், கூறினார்.

மேலும், “காவல் துறையில் உள்ள ஊழல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்டவைகளுக்கும் முன்னுரிமை கொடுப்பேன் என்றும், காவல் துறையில் பல பொறுப்பு உள்ளது, சென்னையில் பல பொறுப்புகளின் பணியாற்றி உள்ளேன், இது ஒரு கூடுதல் பொறுப்பாக அமைந்து உள்ளது” என்றும், பேசினார்.

“சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என புள்ளி விவரங்கள் மூலமாக தான் தெரிய வரும் என்றும், குற்றங்கள் நடந்து கொண்டே தான் இருக்கும் என்றும், அதை தடுக்கும் பணிகளில் ஈடுப்பட்டே தான் இருக்கிறோம் என்று பேசிய அவர், புள்ளி விவரங்களில் தமிழகம் மற்றும் சென்னை காவல் துறையில் கடந்த 2 ஆண்டுகளில் கொலைகளின் எண்ணிக்கை குறைந்து தான் உள்ளது என்றும், இருப்பினும் அதை தடுக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டே தான் வருகிறோம்” என்றும், கூறினார்.

குறிப்பாக, “ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் சரியான நடவடிக்கை காவல்துறை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு, அதை விசாரித்து சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுப்பேன்” என்றும், அவர் தெரிவித்தார்.

முக்கியமாக, “ரவுடியிசத்தை கட்டுப்படுத்த என்கவுண்டர் இருக்குமா?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய அவர், “என்கவுண்டர் கிடையாது. ரவுடிகளுக்கு என்ன மொழி புரியுமா அந்த வகையில் நடவடிக்கை இருக்கும்” என்றும், அருண் அதிரடியாக பேசினார்.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *