கள்ளக் காதலை காட்டிக் கொடுத்த முதியவருக்கு அருவாள் வெட்டு அரங்கேறிய சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
சீர்காழி அருகே திருவெண்காட்டில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
சீர்காழி அடுத்த திருவெண்காடு அம்பேத்கர் நகரைச் சேர்ந்த 60 வயதான சீனிவாசன் வசித்து வருகிறார்., அதே பகுதியை சேர்ந்த 25 வயதான அருள் செல்வன் என்பவர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு பெண்ணிடம் கள்ளக் காதல் தொடர்பில் இருந்ததை 60 வயதான சீனிவாசன் பார்த்து உள்ளதாக தெரிகிறது.
தான் நேரில் பார்த்த இந்த கள்ளக் காதல் விசயம் பற்றி அவர் அப்பகுதி மக்களிடம் கூறி உள்ளார். இந்த விசயம் அருள் செல்வன் காதக்கும் எட்டி உள்ளது. இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியிருக்கிறது. இதனால், அவர்களுக்குள் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக, அருள் செல்வன்? இன்று அம்பேத்கர் நகர் பகுதியில் இருந்த சீனிவாசனை அறிவாளால் தலை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் கண்மூடித்தனமாக வெட்டி உள்ளார்.
இதில், படுகாயம் அடைந்த முதியவர் சீனிவாசன், ரத்த வெள்ளத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து உள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கீழே கிடந்த சீனிவாசனை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், உயர் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவெண்காடு காவல் துறையினர், அருள் செல்வனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.