Mon. Dec 23rd, 2024

“டீன்ஸ்” பட பிரச்சனை.. நடிகர் பார்த்திபனுக்கு எதிராக நீதிமன்றம் சென்ற கிராபிக்ஸ் கலைஞர்

 

 

“ “டீன்ஸ்” திரைப்படத்திற்கு பணியாற்றியதற்காக தனக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை குறித்து நேரில் பேச மறுக்கும் நடிகர் பார்த்திபன், காவல் துறை மூலம் தன்னை மிரட்டி வருகிறார்” என்று, படத்தில் பணியாற்றிய கிராபிக்ஸ் கலைஞர் சிவ பிரசாத் தெரிவித்து உள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியாக உள்ள “டீன்ஸ்” என்னும், திரைப்படத்தில் கிராஃபிக்ஸ் பணியாளராக கோவையைச் சேர்ந்த சிவபிரசாத் பணியாற்றினார். படம் முடிந்த சூழலில் நடிகர் பார்த்திபன் மற்றும் சிவபிராசத்க்கும் இருவருக்கும் இடையேயான ஒப்பந்தத்தின் படி, கடந்த பிப்ரவரி மாதமே கிராஃபிக்ஸ் பணிகளை முடிக்க வேண்டும் என்றும், அதற்கு ஊதியமாக 68 லட்சத்து 50 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, முதல் தவனையாக 42 லட்சம் ரூபுாய் கொடுத்த நடிகர் பார்த்திபன், சிவ பிரகாஷ் ஒப்பந்தத்தின் படி குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்காததால், முழுத் தொகையும் கொடுக்காமல் கால தாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, சிவ பிரசாத் மீது கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் நடிகர் பார்த்திபன் கொடுத்த புகார் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

இந்த நிலையில், “தனக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை முழுமையாக செலுத்தும் வரை “டீன்ஸ்” திரைப்படம் வெளியிட தடை விதிக்கக்கோரி, சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சிவ பிரசாத் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “ஒப்பந்தத்தின் போது, பேசியதை விட அதிக கிராபிக்ஸ் வேலைகள் கொடுத்ததாலேயே குறிப்பிட்ட நாட்களுக்குள் பணிகள் முடிக்க கால தாமதம் ஏற்பட்டதாகவும், தனக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையான சுமார் 51 லட்சம் கொடுக்கும் வரை வரை “டீன்ஸ்” திரைப்படம் வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்றும், கேட்டுக்கொண்டார்.

இந்த மனுவானது, இன்று சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வழக்கு தொடர்பாக ஜூலை 18 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய நடிகர் பார்த்திபனுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *