பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் சூர்யா இரத்த தானம் செய்தது, இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா நடிகர்களை காட்டிலும், நடிகர் சூர்யா எப்போதும் கல்வி மற்றும் சமூக பார்வையுடன் செயல்பட்டு வருகிறார். நடிகர் சூர்யா, தன் ரசிகர்களுக்கு முன் மாதிரியா இருக்கும் வகையில், பல்வேறு விசயங்களை களத்தில் இறங்கி செய்வார். இதனால், ரசிகர்களைப் போலவே ஒவ்வொரு ஆண்டும் தானும் இரத்த தானம் செய்ய உள்ளேன் என்று, கடந்த ஆண்டு எடுத்துக்கொண்ட உறுதி மொழியினை நிறைவேற்றும் விதமாக, நடிகர் சூர்யா இன்று தானாக முன் வந்து இரத்த தானம் செய்தார்.
நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு, வட சென்னை தெற்கு மாவட்டம் சூர்யா நற்பணி மன்றம் சார்பில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், நேற்றைய தினம் 400-க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் செய்தனர்.
நடிகர் சூர்யாவைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் இரத்த தானம் செய்யவும் ரசிகர்கள் திட்டமிட்டு உள்ளனர்.
அத்துடன், சூர்யாவின் பிறந்த நாள் மட்டுமின்றி, எப்போது எங்கு தேவைப்பட்டாலும், இரத்த தானம் அளிக்கும் ஒரு அமைப்பையும் ரசிகர்கள் மேற்கொண்டு உள்ளனர். தனது, ரசிகர்களின் இந்த சேவையை பாராட்டிய நடிகர் சூர்யா, வீடியோ கால் மூலமாக பல்வேறு மாவட்ட ரசிகர்களை வெகுவாக பாராட்டினார்.
முக்கியமாக, கடந்த ஆண்டு 2000-க்கும் மேற்பட்டோர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இரத்த தானம் செய்தனர். அவர்களை நேரில் அழைத்து விருந்தளித்து பாராட்டிய நடிகர் சூர்யா, இனி ஒவ்வொரு ஆண்டும் தானும் ரத்த தானம் செய்ய உள்ளதாக அப்போது அறிவித்தா். அதனை இன்றைய தினம் செயலிலும் சூர்யா காட்டி உள்ளார்.