அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஷாலினி அஜித்குமார் தனது கணவர் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த நிலையில், இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித்குமார் தற்போது “விடாமுயற்சி” மற்றும் “குட் பேட் அக்லி” ஆகிய படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த இரு திரைப்படங்களும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அடுத்தடுத்து திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்து படைக்க இருக்கிறது.
இந்த சூழலுக்கு மத்தியில் தான், நடிகர் அஜித்குமாரின் மனைவி ஷாலினிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென்று உடல் நல குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து, ஷாலினி அஜித்குமார் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
மனைவிக்கு உடல் நிலை சரியில்லை, அறுவை சிகிச்சை அளிக்கும் அளவுக்கு அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்த நடிகர் அஜித்குமார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மனைவி ஷாலினியை கவனித்துக்கொள்ள, “விடாமுயற்சி” படபிடிப்பிலிருந்து சென்னை வந்து, அவருடன் தங்கி இருந்து மனைவியை கவனத்திக்கொண்டார்.
அத்துடன், மனைவி ஷாலினியின் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவரது உடல் நிலை மீண்டும் தேரிய நிலையில், நடிகர் அஜித், மீண்டும் படப்பிடிப்புக்கு சென்றார்.
ஷாலினி தற்போது அறுவை சிகிச்சைக்கு பிறகு ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில், ஷாலினி மருத்துவமனையில் இருக்கும் பொழுது, தன்னுடைய மகன் தனக்கு நெற்றியில் முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தும் புகைப்படத்தையும், கணவர் அஜித் அணைத்துக்கொண்டு அன்பை பரிமாரிய புகைப்படத்தையும் ஷாலினி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். தற்போது, அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.