“உண்மை பேசுபவன் வார்த்தைகளின் போராட்டத்தில் எப்போதும் தோல்வி அடைகிறான். ஏனெனில் அவன் சத்தியத்தினால் கட்டிப் போடப்பட்டிருக்கிறான். பொய் பேசுபவனுக்கு எதை வேண்டுமானாலும் சொல்ல முடியுமாக இருக்கிறது.”
– ஃபியோதர் தஸ்தாயேவ்ஸ்கி ..
உண்மை, வாழ்வின் பயம் இருப்பதால் அல்லது எப்போதும் நிச்சயமாக இருக்க வேண்டும், உறுதியாக இருக்க வேண்டும் என்ற மனதின் விருப்பம் இருப்பதால் சித்தாந்தங்கள் உருவாகின்றன.
நாம் ஒருபோதும் நிச்சயமற்றவர்களாக இருக்க விரும்பவில்லை. ஏனென்றால், நிச்சயமற்றதாக இருப்பது மிகவும் தொந்தரவாக இருக்கிறது.
பின்பற்ற ஒரு சித்தாந்தம் இருந்தால், நீங்கள் தொந்தரவு செய்யப்பட மாட்டீர்கள்.
எனவே எனது பயம், குழப்பம், பேராசை மூலம் சித்தாந்தங்களை உள்ளம் ஏற்றுக்கொள்கின்றன.
ஓர் உண்மை தெரியுமா? உள்ளம் என்பது ஒரு வழிப்பாதை. ஒரே நேரத்தில் ஒரே ஒரு எண்ணம் தான் உங்கள் உள்ளத்தில் நிலை கொள்ள உள்ளத்தில் நிலைநிறுத்தும் எண்ணம் வலிமை பெறுகிறது. அந்த எண்ணம் நேர்மறை எண்ணமாக மட்டுமே இருந்தால் வாழ்க்கை முழுவதும் உங்கள் வளர்ச்சிக்கான வழிகளை திறந்து கொண்டே இருக்கும். எதிர்மறை எண்ணம் கொஞ்சம் உணர்ச்சிபூர்வமானது. அது நெருடிக் கொண்டே இருக்கிற ஒரு ரகசிய காயம் போல குறுகுறுத்துக் கொண்டே இருக்கும். அதைக் கிள்ளிவிடத் தோன்றிக் கொண்டே இருக்கும். அந்த எதிர்மறை எண்ணம் நல்லெண்ணங்கள் நுழைகிற பாதையை மறைத்துக் கொண்டிருக்கும். நல்ல எண்ணம் நன்மை பயக்கும்..தீய எண்ணம் தீமை பயக்கும்.நல்லதே நினைப்போம்.நல்லதே நடக்கும்.
நாம் அதீதமாக விரும்புவதை இழந்துவிடகூடாது என்ற பதட்டத்தில் இயல்பை தொலைப்பதும், அப்படி இயல்பை தொலைப்பதாலேயே விரும்பியதை இழப்பதும், அல்லது நம்மையும் அறியாமல் தொலைத்து நிற்பதும் தவிர்க்க முடிவதில்லை.
அது அப்படி தான்..
மனசாலக் கூட துரோகம் செய்யணும்னு நினைக்க வேணாம். அப்படி நினைக்கறதே, இன்னிக்கி இல்லேன்னாலும் ஒருநாள், பெருந்துன்பத்தைத் தந்துரும். அதேநேரம், அவங்க நல்லாருக்கணும் இவங்க நல்லாருக்கணும்னு மனசுல நினைச்சாலே போதும். அவங்க நல்லாருப்பாங்க. நாமளும் நல்லாருப்போம். நினைப்போம், நல்லதையே. நல்லதாவே.
இயற்கை மிகப்பெரியது!
வேற என்னத்த சொல்ல…
– கே.எஸ்.ராதாகிருஷ்ணன்