பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆனந்தன், ஆம்ஸ்ட்ராங் மனைவி திருமதி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், திரைப்ட இயக்குனர் பா. ரஞ்சித் உள்ளிட்ட பகுஜன் சமாஜ் கட்சியினர் 1500 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சென்னையில் கடந்த மாதம் 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் இதுவரை 21 நபர்களை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், திருவேங்கடம் என்ற ரவுடியை போலீசார் என்கவுண்டர் செய்து உள்ளனர். அதன் தொடர்ச்சியாக இந்த வழக்கில் விசாரணைகளும், கைது படங்களும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தான், பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வழங்க வேண்டி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினர் சுமார் 1500 நபர்களுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆனந்தன், பகுஜன் சமாஜ் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியுமான திருமதி ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்ட 1500 கட்சியினர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
மேலும், ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட திரைப்ட இயக்குனர் பா. ரஞ்சித் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அதாவது, சட்ட விரோதமாக கூடுதல் மாநகர காவல் சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளுக்கு நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் மனைவி மீதும் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது ஆம்ஸ்ட்ராங் ஆதாரவாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்ரபை ஏற்படுத்தி உள்ளது.