தமிழ்நாட்டைச் சேர்ந்த முத்தமிழ் செல்வி, 6 வது மலையாக அண்டார்டிகாவில் உள்ள வின்சன் மாசிப் மலையை ஏறி சாதனை படைக்க உள்ள நிகழ்வு, தமிழர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இமயமலை உள்ளிட்ட 5 மலைகளை ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண்மணியான முத்தமிழ் செல்வி, தற்போது 6 வது மலையை விரைவில் ஏறி சாதனை படைக்க உள்ளதாக பேட்டி அளித்து உள்ளார்.
“ஒலிம்பிக்கில் மல்யுதத வீரர் தகுதி நீக்கம் செய்தது மிகப்பெரிய துரோகம் என்றும், இது தொடர்பாக போராட்டம் நடைப்பெற்றால், நான் தான் முதல் ஆளாக கலந்து கொள்வேன்” என்றும், தமிழச்சி முத்தமிழ் செல்வி பரபரப்பாக பேசி உள்ளார்.
அதாவது, தனியார் பள்ளி சார்பாக ஒரு லட்ச ரூபாய் முத்தமிழ் செல்விக்கு நன்கொடை வழங்கப்பட்டது. இது தொடர்பான விழாவானது, சென்னை தாம்பரம் அடுத்த நன்மங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.
அப்போது, இந்த விளையாட்டு விழாவில், உலகின் மிகப் பெரிய 5 மலைகளை ஏறி சாதனை படைத்த தமிழகத்தை சேர்ந்த மலை ஏறும் வீராங்கனையான முத்தமிழ் செல்வி, சிறப்பு விருந்தினாரக கலந்து கொண்டனார்.
அப்போது, அந்த பள்ளி சார்பாக 50 ஆயிரம் ரூபாய், மாணவர்கள் சார்பாக 50,000 ரூபாய் என ஒரு லட்ச ரூபாய் தனியார் பள்ளி சார்பாக முத்தமிழ் செல்விக்கு, மேலும் பல சாதனைகள் படைக்க நன்கொடையாக வழங்கப்பட்டது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முத்தமிழ் செல்வி, “ஏற்கனவே ஐந்து கண்டத்தில் உள்ள மிக மிகப்பெரிய மலை சாதனைப் படுத்தி உள்ளேன் தற்போது ஆறாவது முறையாக அண்ட அண்டார்டிகாவில் உள்ள மிகப்பெரிய மலையான வில்சன் மாசிப் என்ற மலையை ஏற உள்ளேன்.
இதற்காக பலர் உதவி செய்துள்ளனர். தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல உதவிகளை செய்துள்ளார்.
அதே போல், இந்த பள்ளி சார்பிலும் தனக்கு உதவியாக வழங்கப்பட்டு உள்ளது. ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீரர் வீனேஷ் போகத், 100 கிராம் எடை கூடுதாக இருந்ததாக லூறிதகுதி நீக்கம் செய்தது ஏற்றுக்கொள்ள முடியாதது. அவர் ஒலிம்பிக்கில் தோற்கவில்லை நிச்சயம் அவருக்கு ஆதரவாக நாம் இருக்க வேண்டும். அவருக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றால், முதலாளாக நான் கலந்து கொள்வேன்” என்றும், முத்தமிழ் செல்வி பேசினார்.