“வன்முறையை தூண்டும் வகையில் பேசி வரும் திரைப்பட நடிகர் ரஞ்சித் நடவடிக்கை எடுக்ககோரி” சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் வன்னியசு இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்தார்.
அந்த புகாரில், “திரைப்பட நடிகர் ரஞ்சித் என்பவர் தான், இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் என்ற திரைப்படத்தில் திட்டபட்டு சமூக அமைதியை சீர்குலைக்கிற வகையிலும் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிற சமூகங்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனும் திரைப்படத்தை எடுத்து உள்ளார்.
அத்துடன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அவமானப்படுத்த அசிங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனும் பல்வேறு காட்சிகளை அந்த திரைப்படத்தின் டிரெய்லரில் வைத்து உள்ளார். இது தொடர்பாக, புகார் அளித்த பிறகு சர்ச்சை காட்சிகள் நீக்கப்பட்டு படம் வெளியாகி உள்ளது.
ஆனால், சமீபத்தில் நடந்த பிரஸ் மீட் ஒன்றில் நடிகர் ரஞ்சித் ஆணவ படுகொலைகளை நியாயப்படுத்தும் வகையிலும், அது தவறில்லை என்றும் அவர் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. மோசமான படுகொலைகளை ஆதரிக்கிற வகையிலும் ஊக்குவிக்குற வகையிலும் நடிகர் ரஞ்சித் பேசி உள்ளார்.
ச ட்டத்திற்கு புறம்பான வகையில் நடிகர் ரஞ்சித் பேசி வருவது என்பது மிகப் பெரிய ஒரு தீவிரவாத செயலாக தான் பார்க்க வேண்டும். அவர் மீது காவல் துறை சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று, தனது புகார் மனுவில் வன்னி அரசு பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.