தஞ்சை மாவட்டம் பாப்பாநாடு கிராமத்தில் காதலன் மற்றும் அவனது நண்பர்களால் இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொட்டகை தீயிட்டு எரிக்கப்பட்டு உள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில், ஒரு சிறுவன் உள்பட நான்கு பேர் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தஞ்சை மாவட்டம் பாப்பாநாடு கிராமத்தில் காதலியை தனிமையில் பேச வேண்டும் என வரவழைத்த காதலன் கவிதாசன் தனது நண்பர்கள் ஆன 17 வயது சிறுவன் மற்றும் திவாகர் பிரவீன் ஆகியோர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.
இதில், பலத்த காயம் அடைந்த 22 வயது இளம் பெண் தஞ்சை அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த இளம் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காதலன் கவிதாசன் அவரது நண்பர்கள் திவாகர் பிரவீன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேர் மீது கொலை மிரட்டல் மற்றும் ஆயுதங்களால் தாக்குதல் திருடுதல், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தல் ஃபுல் பட ஆறு பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
குற்றவாளிகள் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.
குறிப்பாக, 36 மணி நேரம் விசாரணைக்கு பிறகு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், குற்ற சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட கொட்டகை தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதால், தடயங்களை அளிப்பதற்காக எரிக்கப்பட்டதா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்