கையில் தாலி, மெட்டியோடு வடபழனி காவல் நிலையத்தை ரணகளப்படுத்திய பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பெண், இஸ்மாயில் என்ற சதீஷ் என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் பிரிந்து சென்றார். இதனால், இருவருக்கிடையே தொடர்ச்சியாக பிரச்சினை இருந்து வந்து உள்ளது.
இந்த நிலையில் தான், சென்னை வடபழனி பகுதியில் வைத்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு, தங்கும் விடுதியில் தங்கி இருப்பதாக மனைவிக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், நேரிலேயே அவர் குறிப்பிட்ட தங்கும் விடுதிக்கு சென்று, கணவன் இஸ்மாயிலுடன் தகராறு செய்திருக்கிறார்.
இது குறித்து, தகவல் அறிந்து வடபழனி போலீசார் அங்கு சென்று இஸ்மாயிலையும் புதிதாக திருமணம் செய்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், இஸ்மாயிலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்தது புதுப் பெண் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தெரிந்தது. பிறகு இஸ்மாயின் முதல் மனைவி புதிதாக திருமணம் செய்து கொண்ட பெண் வீட்டாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், வடபழனி காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, அந்த முதல் மனைவி, புது பெண்ணின் கார் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
முக்கியமாக புதுப்பெண் தாலி, மெட்டியை கழற்றி மனைவியிடம் கொடுத்து விட்டு சென்று விட்டார். ஆனாலும், முதல் மனைவி காவல் நிலையத்தில் வைத்து இஸ்மாயிலை ஆபாசமாக திட்டி தகராறில் ஈடுபட்டதையடுத்து காவல் நிலையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அத்துடன், “தான் காதலித்து இஸ்மாயிலை திருமணம் செய்து கொண்டதாகவும், அவர் இஸ்மாயில் பெயரை மறைத்து சதீஷ் என கூறி ஏமாற்றியதாகவும்” முதல் மனைவி, குற்றம் சாட்டினார். கூடவே, “தன்னிடம் 15 சவரன் தங்க நகைகள், 1 லட்சம் ரூபாய், புது பைக் ஆகியவற்றை வாங்கி கொண்டு மோசடி செய்துவிட்டு ஓடி விட்டதாகவும்” அந்த பெண் தனது கணவர் மீது பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.