“பொன்னியின் செல்வன்-1” மற்றும் தனுஷ் ஹீரோவாக நடித்த “திருச்சிற்றம்பலம்” ஆகிய படங்களுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
“பொன்னியின் செல்வன்-1” படத்துக்காக, சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது பெறுகிறார். விருது குறிதது பேசிய பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், “இது வரை 34 இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளேன். அந்த இயக்குனர்களுக்கு நன்றி என்றும், “பொன்னியின் செல்வன்”-க்கு கிடைத்த விருது என்பதால், இயக்குனர் மணிரத்னத்துக்கும் நன்றி!” என்றும், அவர் கூறினார்.
அதே போல், மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, திரிஷா நடித்த “பொன்னியின் செல்வன்-1” படத்துக்காக , சிறந்த சவுண்ட் டிசைனருக்கான விருது பெறுகிறார் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி.
அதே போல், தனுஷ் ஹீரோவாக நடித்த “திருச்சிற்றம்பலம்” படம், 2 தேசிய விருதுகளை தட்டிச் சென்று உள்ளது.
அதில், ஹீரோயினாக நடித்த நடிகை நித்யாமேனன், சிறந்த நடிகைக்கான விருதை தட்டி சென்று உள்ளார். அதே படத்திற்கு ஜானி, சதீஷ் “மேகம் கருக்காதா” பாடலுக்கு சிறந்த டான்ஸ் மாஸ்டர் விருதையும் பெருகின்றனர்.