ஆம்ஸ்ட்ராங் கொலை செய்ய ஆற்காடு சுரேஷின் மனைவி, ஒன்றரை லட்சம் ரூபாரய பொன்னை பாலுக்கு கொடுத்ததாக, காவல் துறை விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், இது வரை 23 பேரை சென்னை செம்பியம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.
இந்த கொலைக்கான காரணம்? மற்றும் கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் தான், ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவியை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், ஆற்காடு சுரேஷின் நினைவு தினத்திற்கு ஆற்காடு அருகில் உள்ள பொன்னை கிராமத்திற்கு அவரது மனைவி பொற்கொடி வருவார் என்று, போலீசார் காத்திருந்தனர். ஆனால், ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக தகவல் அறிந்து தனிப்படை போலீசார், அங்கு சென்று ஆற்காடு சுரேஷ் மனைவி பொற்கொடியை அதிரடியாக சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
இதனையடுத்து, ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தை, உறவினர் பொன்னை பாலுவை வைத்து ஆற்காடு சுரேஷ் மனைவி அரங்கேற்றினாரா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், பொன்னை பாலுவின் வங்கி கணக்கு பரிவர்த்தனைகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, ஆற்காடு சுரேஷ் மனைவி, அவருக்கு ஒன்றரை லட்ச ரூபாய் பணம் அனுப்பி இருப்பது தெரிய வந்தது. ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக இந்த பணத்தை கொடுத்தாரா? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்து உள்ளது. அந்த கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.
குறிப்பாக, ஆற்காடு சுரேஷ் நினைவு இடத்தில் வைத்து அவரது மனைவி பொற்கொடி மற்றும் அவரது மகனை வைத்து சபதம் எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்த தகவல்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர். இதனால், ஆற்காடு சுரேஷ் மனைவியும் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் தொடர்புடையவராக இருப்பதாக கூறப்படுவது குறிப்பித்தக்கது.