Mon. Dec 23rd, 2024

Kadavule Ajithe: ‘கடவுளே அஜித்தே’ கோஷத்தால் டென்ஷன் ஆன அஜித்.. அந்த முக்கிய points..

சமீப காலமாகவே மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் ‘கடவுளே அஜித்தே’ என்ற கரகோஷம் எழுப்பி, அதை இணையத்தில் டிரெண்ட் செய்வதை அஜித் ரசிகர்கள் வழக்கமாக்கி வருகின்றனர். இன்ஸ்டாவிலும் இந்த வீடியோவை வைத்து பல ரீல்ஸ்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகின்றன. இதுபோன்ற கோஷங்கள் எனக்கு கவலை அளிப்பதாக நடிகர் அஜித் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், தற்போது இது குறித்த அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.

இது தொடர்பான அவரது அறிக்கையில், “சமீபகாலமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளியில், அநாகரீகமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் ‘க… அஜித்தே’ என்று இந்த கோஷம் என்னை கவலையடைய செய்திருக்கிறது. எனது பெயரை தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் எனக்கு துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

எனவே பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசெளகர்யத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்களை ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன். என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து, உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள் என்றும்” அஜித் தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *