கோவையில் கள்ளக் காதலில் பிறந்த குழந்தையை ரூ.2 லட்சத்துக்கு விற்று விட்டு, “குழந்தையை யாரோ கடத்தி விட்டார்கள்” என்று, நாடகம் ஆடிய தாய் உட்பட 7 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர். இதில், பல்வேறு திட்டிகிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோவை காரமடையைச் சேர்ந்தவர் அனிதா. இவருக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை மாயமாகிவிட்டதாகவும், குழந்தையை கண்டுபிடித்து தருமாறும் துடியலூர் காவல் நிலையத்தில் அந்த தாய் புகார் அளித்தார்.
இதனையடுத்து, இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறை ஆய்வாளர் லதா மற்றும் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதில், குழந்தை கடத்தப்படவில்லை என்பதும், குழந்தையை வேறு ஒருவருக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
இந்த சம்பவத்தில் அனிதாவின் கள்ளக் காதலன் மோகன்ராஜ்க்கு தொடர்பு இருப்பதும், முக்கியமாக தாய் அனிதாவுக்கு தெரிந்தே இந்த சம்பவம் நடைபெற்றறு இருந்ததும் அதிர்ச்சி தகவல் வெளியானது.
இதனை அடுத்து காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், அந்த குழந்தை கன்னியாகுமரியில் உள்ள தம்பதிக்கு விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது.
உடனடியாக கன்னியாகுமரிக்குச் சென்ற காவல் துறையினர், ஒரு வயது ஆண் குழந்தையை மீட்டு கோவை கொண்டு வந்தனர். தொடர்ந்து, காவல் துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாய் அனிதா அவருடைய கள்ளக் காதலன் பெரம்பலூர் கீழ்பிள்ளையனூர் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ், கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த ரஞ்சிதா என்ற ஆர்த்தி, சிங்காநல்லூரைச் சேர்ந்த சுஜாதா, புகழம்மபாள், சேலம் தாசம்பட்டியைச் சேர்ந்த லில்லி, சேலம் மாவட்டம் வாழப்பாடியில் அருகே உள்ள கருமாபுரத்தைச் சேர்ந்த சோபா ஆகிய 7 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய இந்த விசாரணையில், பல்வேறு திட்டிகிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது, காரமடையைச் சேர்ந்த அனிதாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகிய 7 வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். அப்பொழுது, அவருக்கு பெரம்பலூரைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக் காதலாக மாறி உள்ளது.
இதனை அடுத்து இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தனர். இதனால், அனிதா கர்ப்பமானார். அவருக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. கள்ளக் காதலில் குழந்தை பிறந்ததால், வெளியே தெரிந்தால் அவமானம் என்று கருதிய அனிதாவும், மோகன்ராஜும் குழந்தையை சேலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ரூபாய் 2 லட்சத்துக்கு விற்றனர். அதன் பின்னர், அந்த குழந்தையை கன்னியாகுமரியில் உள்ள ஒரு தம்பதிக்கு விற்பனை செய்து உள்ளனர்.
குழந்தையை விற்பது தொடர்பாக அனிதாவுக்கு அவரது கள்ளக் காதலனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த அனிதா தனது குழந்தையை கடத்தப்பட்டதாகவும், அந்த குழந்தையை மீட்டு தரும்படி காவல் நிலையத்தில் புகார் செய்து உள்ளார்.
அத்துடன், அவரே குழந்தையை தற்போது கன்னியாகுமரியில் உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்து இருப்பதாகவும், காவல் துறையிடம் தெரிவித்து உள்ளார். அதன் பின்னர் காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், தான் கள்ளக் காதலில் பிறந்த குழந்தையை தாயும், கள்ளக் காதலனும் சேர்ந்து விற்பனை செய்தது தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து துடியலூர் காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மேற்கண்ட நிலையில், 7 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் 7 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, கோவையில் கள்ளக் காதலில் பிறந்த குழந்தையை தாயும், கள்ளக் காதலுடன் சேர்ந்து விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.