சென்னை கோட்டூர்புரத்திலிருந்து எழும்பூர் நோக்கி வந்த கார் சென்னை நந்தனம் தேவர் சிலை அருகே தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தீ விபத்தில் கார் முற்றிலும் சேதம் எழும்பு கூடாக காட்சி அளித்தது.
சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இன்று இவர் கோட்டூர்புரத்திலிருந்து போர்டு நிறுவனத்தைச் சார்ந்த கார் ஒன்றை எடுத்துக் கொண்டு, அவரது முதலாளியின் வீடான எழும்பூரை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது, காரானது சென்னை நந்தனம் தேவர் சிலை அருகே வந்து கொண்டிருந்தபோது, காரின் முன் பக்கத்தில் இருந்து புகை வந்ததை அவ்வழியாக வந்து உள்ளது. இதனை இருசக்கர வாகன ஓட்டி கவனித்து ஓட்டுநர் மாரியப்பன் இடம் தகவலை கூறி உள்ளனர்.
காரை ஓரமாக நிறுத்திய மாரியப்பன், முன்பக்கத்தில் உள்ள பாகத்தை திறந்த போது தீ மளமளவென பரவியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் தீ கட்டுக்கடங்காமல், அடுத்த 5 நிமிடத்தில் கார் முழுவதும் எரிந்து உள்ளது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்த நந்தனம் தீயணைப்பு துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் அண்ணா சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.