சினிமா இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரின் சகோதரர் வீட்டில் வேலை பார்க்கும் பணி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த சிந்து, கடந்த 12 வருடங்களாக கணவரை பிரிந்த நிலையில், மயிலாப்பூரில் தனது பிள்ளைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
அத்துடன், சமீப காலமாக தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையில் உள்ள திரைப்பட இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் சகோதரர் செந்தில் குமார் வீட்டில் தங்கி, அவரது தாயாரை பராமரித்துக் கொள்ளக் கூடிய பணியில் சிந்து ஈடுபட்டு வந்து உள்ளார்.
இந்த சூழலில் தான், நேற்றைய தினம் பணிப்பெண் சிந்து, வேலை பார்த்து கொண்டிருந்த போது, தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவர், “தான் வீட்டின் வெளியே நிற்பதாகவும், உடனே வெளியே வா உன்னை திருமணம் செய்து கொண்டு, குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்கிறேன்” என்று, கூறியிருக்கிறார். அனால், அதனை ஏற்க சிந்து மறுக்கவே, உடனே சிந்திவிற்கு அவர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிந்து, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், சிந்துவின் வீட்டிற்கு அருகே குடியிருக்கும் பார்த்திபன் என்பவர் குடிபோதையில் மிரட்டல் விட்டு சென்றிருப்பதும், வீட்டருகே குடியிருக்கும் போது, இருவரும் சகஜமாக பேசி வந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருவதும், விசாரணையில் தெரிய வந்து உள்ளது.
இதனையடுத்து, சென்னை தேனாம்பேட்டை காவல் துறையினர் இது குறித்து இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்வம், திரைத்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.