சென்னையைச் சேர்ந்த பிரபல தொழில்அதிபர், காவல்துறை உதவி ஆணையர் மற்றும் உதவி ஆய்வாளர் மீது புகார்….
மனைவி தனது நண்பர் மீது பொய் புகார் அளித்ததாக குற்றச்சாட்டு….
விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மகனை கடத்தியதாக மனைவி புகார்….
மகளை அழைத்து வந்த நண்பரை கடத்தல் வழக்கில் கைது செய்த போலீஸ்…….
தொழிலதிபர் பொய் புகார் அளித்துள்ளதாக காவல்துறை தரப்பில் விளக்கம்
சென்னை அண்ணா நகர் மேற்கு பகுதியில் வசித்து வருபவர் தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை நிறுவனர் பிரசன்னா சங்கர். இந்த நிறுவனத்தின் மதிப்பு 1.16 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இவருக்கும் இவரது மனைவி திவ்யா இருவருக்கும் திருமணம் ஆகி 10 வருடம் ஆகிறது. மேலும் இவர்கள் அமெரிக்காவில் வசித்து வந்துள்ளனர் பெங்களூரிலும் ஐடி நிறுவனம் ஒன்றை அமைத்து நிர்வாகித்து வருகின்றனர்.
இவர்களுக்கு 9 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் கருத்து வேறுமகனைடு காரணமாக கணவன் மனைவி இடையே அமெரிக்காவில் உள்ள நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. மேலும் பிரசன்னா சங்கர் மற்றும் திவ்யா ஆகிய இருவரும் தங்களது மகனை மாறி மாறி பார்த்துக் கொள்வதாக அமெரிக்க நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றுள்ளனர் . நான்கு நாட்கள் தாயிடமும் மூன்று நாட்கள் கணவரிடமும் இருக்கும் வகையில் தம்பதியினர் மாறி மாறி மகனை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் பெங்களூரில் ஒரு ஐடி நிறுவனம் ஒன்றை அமைத்து நடத்திக் கொண்டு வருவதால் அது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் பிரசன்னா மற்றும் திவ்யா குழந்தையுடன் சென்னை வந்துள்ளனர். அமெரிக்க நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மார்ச் மூன்றாம் தேதி கணவரின் நண்பர் கோகுல் என்பவரிடம் மகனை ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. அதன் பின்பு இரண்டு நாட்களுக்கு பிறகு மகனை ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தியதால் தொடர்ந்து மனைவி திவ்யா கணவன் பிரசன்னாவிடம் கேட்டுள்ளார்.
மகனை அழைத்துச் சென்ற கணவனின் நண்பர் கோகுலிடம் கேட்கும் பொழுது கணவர் அழைத்துச் சென்று விட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மகளை திருப்பி தராததால் திருமங்கலம் காவல் நிலையத்தில் மகனை கணவரின் நண்பர் ஆன கோகுல் கடத்தியதாக புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
இந்த புகாரின் அடிப்படையில் பிரசன்னா சங்கரின் நண்பர் கோகுலை போலீசார் பெங்களூரில் பிடித்து காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து வந்ததாக தெரியவந்துள்ளது. இது வழக்கு தொடர்பாக பிரசன்னா சங்கர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் ஒருவரை அனுப்பியதாகவும், அதன் அடிப்படையில் பிரசன்னாவின் வழக்கறிஞரிடம் திருமங்கலம் காவல்துறை உதவி ஆணையர் மற்றும் உதவி ஆய்வாளர் இரண்டு லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு வழக்கை சாதகமாக கையாள்வதாக கூறியதாக பிரசன்னா குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால் திடீரென தனது சொத்து மதிப்பின் அளவை தெரிந்து கொண்டு காவல் உதவி ஆணையர் மற்றும் உதவி ஆய்வாளர் 25 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என கேட்டு மிரட்டியதாகவும், மேலும் தனது நண்பர் கோகுலை விதிகளை மீறி பெங்களூருக்கு வரை சென்று கைது செய்து வந்ததுள்ளதாகவும் பிரசன்னா சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
பிரசன்னா சங்கர் இது தொடர்பான குற்றச்சாட்டுகளை மற்றும் புகார்களை முதல்வர் சமூக வலைதள பக்கம் மற்றும் தமிழ்நாடு காவல்துறை சமூக வலைதள பக்கத்தை இணைத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் புகாராக தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையில் தொழிலதிபரான பிரசன்னா சங்கர் பணம் கொடுத்து இந்த வழக்கில் தனக்கு சாதகமாக முடிக்குமாறு காவல்துறையிடம் கேட்டதாகவும் காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மகளை மீட்டு தாயிடம் ஒப்படைத்ததால் ஆத்திரத்தில் சமூக வலைதளத்தில் இவ்வாறு பொய்யான குற்றச்சாட்டை தெரிவித்ததாக காவல்துறை உயர் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்த காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.