தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது புதிய மின் கட்டண உயர்வு!
தமிழ்நாட்டில் மின் பயன்பாட்டுக்கான கட்டணம் 4.83 சதவீகமாக உயர்த்தி தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்கு முறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2.18 சதவீதம் மி ன்கட்டணம் உயர்த்தப்பட்டு 2026 – 27 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியது.
அதன்படி, புதிய மின்கட்டண உயர்வு 4.83 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஜூலை 1 ஆம் தேதியை கணக்கிட்டு உயர்த்தப்பட்ட புதிய மின் கட்டணத்தின் படி வசூலிக்க மின்சார வாரிய முடிவு செய்து உள்ளது.
அதன்படி, வீடுகளுக்கான முன் இணைப்பில் 400 யுனிட்டு பயன்பாட்டளர்களுக்கு மின் கட்டணம் உயர்ந்து உள்ளது. ஏற்கனவே, 4.60 காசு யுனிட் ஒன்றுக்கு பெற பட்டு வந்தது. தற்போது 4.80 காசாக அது உயர்ந்து உள்ளது.
அத்துடுன், 401 யுனிட் முதல் 500 யுனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு, ஏற்கனவே 6.15 காசு பெறபட்டு வந்தது. தற்போது, அது 6.45 காசாக உயர்ந்து உள்ளது.
அதே போல், 501 முதல் 600 யுனிட் வரையில் ஏற்கனவே 8.15 காசு பெறபட்டது. தற்போது, அது 8.55 காசாக உயர்த்தபட்டு உள்ளது. 601 முதல் 800 யுனிட் வரையில் ஏற்கனவே 9:20 காசு யுனிட்டுக்கு பெறப்பட்டது. அது,
தற்போது 9.65 காசாக உயர்த்தபட்டது. 801 முதல் 1000 யுனிட் வரையில் முன்பு 10.20 காசு வசூலிக்கப்பட்டது.
அது, தற்போது 10.70 காசாக வசுலிக்கபட உள்ளது.
முக்கியமாக, 1000 யுண்ட் க்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு 11.25 காசு வாங்கபட்டது. இனி, 11.80 காசாக வசூலிக்கபடும்.
குறிப்பாக, புதிய மின் இணைப்பு வாங்குபவர்ககுக்கும் கட்டணம் உயர்த்தபட்டுள்ளது.