நடிகர் விஜய்யை கவிதை மழையில் நனைய வைத்த மாணவியைக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ஒட்டுமொத்த மீடியாக்களும் மாணவியை சூழ்ந்து தனித்தனியாக பேட்டி எடுத்து வருகின்றனர்.
நடிகர் விஜயிடம் சான்றிதழும், பரிசும் பெற மேடை ஏறிய தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த மாணவி விதர்சனா, மைக் பிடித்து கவிதை பேச தொடங்கினார்.
அதன்படி,
“திரு.சந்திரசேகரனால் கண்டெடுத்த மாமன்னரே
மகிழம்பு வாசனையரே கள்ளமில்லா கனிவு செல்வரே
காலதேவனின் அன்பு புதல்வரே நிலமுள்ள வரியில் நீமிர் வாழ்க!
நிலவு உள்ள வரையில் நீமீர் வாழ்க!
கலைமகனே தமிழ்நாட்டின் தலைமகனே
நீ திரை உலகில் மட்டுமல்ல கலைமகனே
கல்விக்கொடை தந்ததால் நீ அந்த கலை மகளுக்கே கலைமகன்
அதனால் நீ ஒரு கலைமகன்!
கல்வி கண் திறந்தவர் காமராஜர் என்றால்
நீயோ கல்வியின் ஞானக்கண் திறந்தவர்!
வி என்றாலே வியப்பு
பெயரின் துவக்க எழுத்து எனில் அதுவே சிறப்பு
நானே விதர்சனா நீயும் விஜய் அண்ணா!
நீ நடிக்காத பாத்திரமும் இல்லை
உன்னை அறியாத கோத்திரமும் இல்லை
ஏனெனில் நீ சாஸ்திரமும் அறிந்தவன்
நடிப்பின் சூத்திரமும் தெரிந்தவன்!
இளைய தளபதியாய் திரையில் நுழைந்தாய்
இன்று வெற்றி கழகத்தின் தலைவராய்
எங்கள் அனைவரின் மனதில் பதிந்தாய்!
எனது கோரிக்கை இன்று..
உனது பிறந்த நாளை கல்வி அபிவிருத்தி நாளாக கொண்டாட வேண்டும்!
தேர்ந்த படங்களில் மட்டுமே நீ நடித்தாய்!
அதனாலே நீ முதல் இடத்தை பிடித்தாய்!
நீ இருப்பதோ நீலாங்கரை! இனி அரசியலில் இருக்காது ஒரு கரை!
இந்த இடத்திற்கு நான் வருவதற்கு நான் பிடித்து எழுதியது பேனா,
நீ என்னை அழைக்காமல் போனால் உன்னை நான் விடுவேனா?!
இன்னும் ஈராண்டில் வருகிறது 26 ஆம் ஆண்டு
அப்பொழுதும் நான் வருவேன் மாணவ மாணவிகளின் முதல்வியாக
நீ எனக்கு பரிசளிப்பாய் மாநிலத்தின் முதல்வராக!
இத்துடன் எனது கவிதையை மூடி
26 ஆம் ஆண்டும் நான் வருவேன் பரிசு வாங்க
ஓடி உன்னை தேடி உன்னை நாடி
நீ என்றும் மாணவ மாணவர்களின் உயிர் நாடி!
கம்பன் வீட்டுத் திண்ணையும் கவி பாடும்
கம்பம் பெத்தெடுத்த பெண்ணும் கவி பாடும்!
என்று கவி பாடி தேனியில் இருந்து புறப்பட்டு வந்த தென்றலாய் கம்பம் கண்டெடுத்த கவிப்பென்னா எனது உரையை முடிக்கிறேன்!” என்று, அந்த மாணவி கவிதையை தெரிக்கவிட்டார். அந்த கவிதை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.