Tue. Jul 1st, 2025

செங்கல் சூளை தொழிலாளியான கணவனை அவரது மனைவி தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு, குடுப்பத்தினருடன் தப்பியோட்டம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தான், கணவன் தலையில் அவரது மனைவியே கல்லை போட்டு கொலை செய்திருக்கிறார்.

விராலிமலை அருகே உள்ள சரளபள்ளத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் 40 வயதான சுப்பிரமணி, விராலிமலை – கீரனூர் சாலையில் கல்குத்தான் பட்டியில் உள்ள ஆறுமுகம் என்பவரது தனியார் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார். கூடவே, தனது மனைவி இளஞ்சியம், மனைவியின் தங்கை மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட மொத்தம் 4 பேர் அந்த செங்கல் சூளையில் உள்ள சின்ன செட்டில் தங்கி சூளையில் பணியாற்றி வந்தனர்.

இந்த நிலையில் தான், சுப்பிரமணி அவரது மனைவி இளஞ்சியம் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று அதிகாலை சூளைக்கு வந்த செங்கல் சூளை உரிமையாளர் ஆறுமுகம் அங்கு வந்த போது, அந்த இடத்தில் சுப்பிரமணி பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டு கடும் அதர்ச்சியடைந்து உள்ளார்.

உடனடியாக, இது குறித்து விராலிமலை காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மணப்பாறை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த வழக்கு பதிந்து தப்பியோடிய இளஞ்சியம் மற்றும் அவரது தங்கை மற்றும் தங்கையின் கணவர் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அத்துடன், கொலைக்காரன காரணம் குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, செங்கல் சூளை தொழிலாளியான கணவனை அவரது மனைவி தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு, குடுப்பத்தினருடன் தப்பியோட்டம் பிடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *