அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லையென நடிகர் கஞ்சா கருப்பு போராட்டம் நடத்திய நிலையில், “அதில் உண்மை இல்லை” என, சென்னை மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் விளக்கம் அளித்து உள்ளனர்.
இன்று காலை சென்னை போரூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று உள்ளார். அப்போது, அந்த மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் இல்லையென்று கூறி, நடிகர் கஞ்சா கருப்பு பொது மக்களோடு சேர்த்து போராட்டம் நடத்தினார்.
நடிகர் கஞ்சா கருப்பு போராட்டம் காரணமாக, போரூரில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
அதாவது, காலை 7 மணியில் இருந்து மருத்துவர்கள் இல்லாமல் காக்க வைத்ததாகக் கூறி, கடும் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் மருத்துவமனை ஊழியர்களுடன் கடும் வாக்குவாதம் செய்தனர். இது, இணையத்தில் பெரும் வைரலான நிலையில், நடிகர் கஞ்சா கருப்புக்கு என்னாச்சு என்று பல்வேறு தரப்பிலிருந்தும் நலம் விசாரிக்கவும் செய்தனர். இதனால், தமிழக அரசுக்கு அவ பெயர் ஏற்பட்டதாகவும் விமர்சிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, இது குறித்து சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “இன்று காலை பணியில் மூன்று மருத்துவர்கள் இருக்க வேண்டிய நேரத்தில், ஒரு மருத்துவர் மட்டுமே காலதாமதம் வந்து உள்ளார். இதனால், சிறிது நேரம் சிகிச்சை பாதிக்கப்பட்டது. ஆனால்,
மூன்றாவது மருத்துவரும் வந்த பிறகு பொது மக்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு இயல்பு நிலைமைக்கு திரும்பியது” என்று, சென்னை மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் விளக்கம் அளித்து உள்ளனர்.