“உயர் நீதிமன்ற உத்தரவை மீறி பாடகி சுசித்ரா, தொடர்ந்து தன் மீது அவதூறு கருத்துகளை தெரிவித்து வருவதாக” நடிகர் கார்த்திக் குமார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
நடிகர் கார்த்திக் குமார் – பாடகி சுசித்ரா தம்பதியர், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு பிரிந்து தனித் தனியாக வாழ்ந்து வருகின்றனர். இதில், இருவருக்குமே தனித் தனியாக திருமணம் ஆகி இருவரும் வேறு வேறு குடும்பங்களாக வாழ்ந்து வருகின்றனர்
இந்த சூழலுக்கு மத்தியில் தான், சமீபத்தில் தனியார் சேனலுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில், பாடகி சுசித்ரா தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் மற்றும் நடிகர் தனுஷ் மற்றும் பல நடிகைகள் பற்றி பல்வேறு கருத்துக்களை பேசியிருந்தார். அது பட்டிதொட்டி எங்கும் பேசும் பொருளாக மாறிப்போனது,
இதனையடுத்து நடிகர் நடிகர் கார்த்திக் குமார், “தனது முன்னாள் மனைவி பாடகி சுசித்ராவின் இந்த பேட்டியால் தன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால், ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடக் கோரி” வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கார்த்திக் குமார் குறித்து கருத்து தெரிவிக்க சுசித்ராவிற்கு இடைக்கால தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.
இந்த வழக்கு, நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மீறியும் தன்னை பற்றி சமூக வலைதளத்தங்களில் அவதூறு கருத்துகளை சுசித்ரா பேசி வருவதாக” கார்த்திக் குமார் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, எதிர் மனுதாரருக்கு நோட்டீஸ் செல்லாததால், இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 22 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார். இதனால், சுசித்ரா – கார்திக் குமார் வழக்கு விரைவில் சூடுபிடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.