Tue. Jul 1st, 2025

“ரோஜா கூட்டம்”, “ஏப்ரல் மாதத்தில்”, “நண்பன்” உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர் ஸ்ரீகாந்த், தனது மனைவியுடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் “ரோஜாா கூட்டம்”, “பார்த்திபன் கனவு”, “நண்பன்” உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ள நடிகர் ஸ்ரீீகாந்த்,  அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் மற்றும் அண்ணாமலையாரை தரிசித்த அவர்கள் உண்ணாமலை அம்மன் சன்னதி கொடி மரத்தின் அருகில் முட்டி போட்டு மனமுருக சாமி தரிசனம் செய்தனர்.

கடந்த 2007-ம் ஆண்டு இவருக்கு திருமணம் நடந்தது. தற்போது இவர் ” கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் ” இந்த படத்தில் நடித்திருக்கிறார். கதாநாயகியாக பூஜிதா நடித்துள்ளார். இரண்டாவது நாயகனாக பரதனும் இரண்டாவது நாயகியாக நிமி இமானுவேலும் நடித்துள்ளனர். கடந்த 11-ம் தேதி வெளியான இப்படம் கலைவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் ஸ்ரீகாந்த் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்திருக்கிறார். தொடர்ந்து கோவில் ஊழியர்கள் தூய்மை பணியாளர்கள் பக்தர்கள் என அனைவருடனும் இணைந்து குழு புகைப்படமும் செல்ஃபியும் எடுத்துக் கொண்டனர்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *