Tue. Jul 1st, 2025

நடிகர் விஜய் மீனவர்களை திரட்டி போராட்டம் நடத்த திட்டம்!

TVK

தமிழக வெற்றி கழகம் சார்பில் மீனவர்களை திரட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும், அந்த போராட்டத்தில் விஜய் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கை மீனவர்களால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு, அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இது குறித்து, தமிழக அரசு மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தியும், கடிதம் எழுதியும் இதுவரை மத்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், கூறப்படுகிறது. இது தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து வருகின்றன.

இந்நிலையில் தான், தமிழக மீனவர்கள் பிரச்சனையில் நிரந்தர தீர்வு காணவும், இலங்கை கடற்படையினரை கண்டித்தும், மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மீனவர்களை திரட்டி கடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் கசிந்து உள்ளன.

அதுவும், மிகப் பெரிய அளவில் மீனவர்களை திரட்டி கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மீனவர்களை திரட்டி நடத்தப்படும் போட்டத்தில், தவெக தலைவர் விஜய் கலந்துக்கொள்வார் என்றும், புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக, ஆர்ப்பாட்டம் நடத்த முறையாக போலீசார் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் கசிந்து உள்ளன.

இந்த ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைக்க கடலூர் மாவட்ட நிர்வாகிகள் அடங்கிய ஒருங்கிணைப்பு குழுவும் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த ஆர்பாட்டத்தில் தவெக தலைவர் விஜயுடன், அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக, வரும் வாரத்தில் இந்த போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும், விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும், கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால், தமிழக அரசியல் களத்தில் தவெக தலைவர் விஜய், “சர்க்கார்” பட பாணியில், மீனவர் பிரச்சனையை தற்போது கையில் எடுதது உள்ளது குறிப்பிடத்தக்கது.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *