Mon. Dec 23rd, 2024

நடிகை வரலட்சுமிக்கு நிச்சயதார்த்தம்! வாழ்த்து சொன்ன நடிகர் விஷால்!!

By Aruvi Apr16,2024

நடிகை வரலட்சுமிக்கு நிச்சயதார்த்தம் ஆன நிலையில், நடிகர் விஷால் வாழ்த்து சொன்னது வைரலாகி வருகிறது. 

தமிழ் சினிமாவில் எத்தனையோ காதல் கதைகளைப் பார்த்திருக்கிறது. அதே நேரத்தில் நிறைய கிசுகிசுக்களையும் பார்த்திருக்கிறது. நிறைய கிசுகிசுக்கள் காதலாக மாறியிருக்கிறது. நிறைய தமிழ் சினிமா காதலர்கள் கிசுகிசுவால் பிரிந்தும் இருக்கிறார்கள்.

அந்த வரியைில் நடிகர் விஷால் – நடிகை வரலட்சுமி குறித்தும் பல கிசுகிசுக்கள் உலா வந்தது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் தான், ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் “ரத்னம்” படம், இன்னும் சில தினங்களில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், “ரத்னம்” படம், செய்தியாளர்களை சந்தித்து வருகிறார் நடிகர் விஷால். 

அப்போது அவரிடம் வரலட்சுமி திருமணம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது, சிரித்துக்கொண்டே பதில் அளித்த நடிகர் விஷால், 

“வரலட்சுமியை நினைத்து ரொம்வே சந்தோஷப்படுகிறேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய விஷால், “தமிழ் மொழியைத் தாண்டி, தெலுங்கு சினிமாவிலும் அவருக்கு ஒரு பெரிய மார்க்கெட் இருக்கிறது. “திமிரு” படத்தில், ஸ்ரேயா ரெட்டியின் நடிப்பை பார்த்து அசந்து போனேன். சமீபத்தில் ஹனுமன் படத்தில் வரலட்சுமியின் நடிப்பை பார்த்தும் வியந்து போனேன். அந்த அளவுக்கு அவர் சிறப்பாக நடித்திருந்தார். அவர் தன்னுடைய சினிமா கேரியரை தாண்டி வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்வது எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றும், கூறினார்.

குறிப்பாக, சற்று மறைமுகமாக “எங்கிருந்தாலும் வாழ்க” என்பது போல், வரலட்சுமியை வாழ்த்தியிருக்கிறார் நடிகர் விஷால்.

By Aruvi

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *