நடிகை எமி ஜாக்சன் – எட் வெஸ்ட்விக் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரகிறது.
நடிகை எமி ஜாக்சன் – எட் வெஸ்ட்விக் திருமணத்திற்கு இயக்குநர் விஜய் வாழ்த்து!
“மதராசப்பட்டினம்” என்னும் வரலாற்று புகழ் மிக்க திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனவர் தான் நடிகை எமி ஜாக்சன். அதன் பிறகு தான், ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலும் அவர் நடித்து இந்தியாவின் பிற மொழி ரசிகர்கள் மத்தியில் அவர் இன்னும் புகழ் பெற்றார்.
இந்நிலையில் தான், நடிகை எமி ஜாக்சன் – ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக் திருமணம் இத்தாலியில் இருக்கும் காஸெல்லோ டி ரோக்கோ நகரில் முன்னதாக நடைபெற்றது.
இந்தத் திருமணத்தில் தமிழ் திரைப்பட இயக்குநர் விஜய், நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருக்கிறார்.
இது தொடர்பாக இயக்குநர் விஜய் பகிர்ந்திருக்கும் வாழ்த்துச் செய்தியில், “அன்புள்ள எமி மற்றும் எட், உங்கள் அழகான திருமணத்திற்கு எனது வாழ்த்துக்கள்!
இரண்டு அற்புதமான இதயங்கள் ஒன்றிணைந்த அழகான இந்தத் திருமணத்தில், நானும் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது.
உங்கள் இருவருக்கும் வாழ்நாள் முழுவதும் சிரிப்பு மற்றும் முடிவில்லாத மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்! இருவரும் ஒன்றாக இணைந்து வாழும் அற்புதமான வாழ்க்கை இன்றில் இருந்து தொடங்கி இருக்கிறது!” என்று, தனது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் விஜய்.