நடிகை மீனாட்சியை சமீபத்தில் வந்த லக்கி பாஸ்கர் படத்தின் மூலம் அனைவருக்கும் தெரிந்திருக்கும்
ஹரியானாவில் பிறந்து வளர்ந்தவர் மீனாட்சி சவுத்ரி.
கோட் படத்தில் நடித்திருந்தாலும் அதில் அவருக்கு பெரிய ரோல் இல்லை என்றே கூறப்பட்டு வந்தது. எந்த முக்கியத்துவமும் இல்லை என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.
அதற்கு முன்னரே தமிழில் “கொலை”, “சிங்கப்பூர் சலூன்” படங்களில் மீனாட்சி சவுத்ரி நடித்திருக்கிறார். மற்றபடி அம்மணி தெலுங்கில் தான் அடித்து ஆடிக்கொண்டிருக்கிறார்.
வடக்கிலிருந்து வந்த ஹீரோயின் என மீனாட்சியை புறம் தள்ளிவிட முடியாது. அவர், ஒரு தொழில் முறை பல் டாக்டர் மற்றும் சர்ஜன். மாநில அளவிலான நீச்சல் போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார். மாநில அளவிலான பேட்மிட்டன் ப்ளேயர். அது போக, மாடலிங் என வலம் வந்தவர், ‘மிஸ் இந்தியா’ போட்டியில் ‘ரன்னர் அப்’ ஆக வந்தார். பிறகு, ‘மிஸ் கிராண்ட் இண்டர்நேஷனல்’ போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார் மீனாட்சி!
சினிமாத் துறைக்கு வந்தவர் இந்தி, தெலுங்கு, தமிழில் ஒரு டஜன் படங்களில் நடித்து முடித்து விட்டார்
“கோட்” படம் அவரை ஏமாற்றினாலும் “லக்கி பாஸ்கர்”, “சங்கராந்திகி வாஸ்துனம்” என, அடுத்தடுத்து இரண்டு படமும் சூப்பர் ஹிட். தெலுங்கு நடிகர் வெங்கடேஷோட ஜோடி சேர்ந்த படத்தில் அம்மணி போலீசாக வந்ததைப் பார்த்து, மொத்த தெலுங்கு தேசமும், “எங்களை அரெஸ்ட் பண்ணுங்க மேடம்” என்று, வரிசை கட்டி நின்று விட்டார்கள்.
அழகோட திறமையும் சேர்ந்த புத்திசாலி பெண்ணாக இருக்கிறார் நடிகை மீனாக்சி. இண்டர்வியூக்களில் அட்டகாசமாக பேசுகிறார். நம்மூர் பெயரை வேற வைத்திருக்கிறார்.
தமிழிலும் அவருக்கு சிறந்த வாய்ப்புகள் கிடைக்குமா?
தமிழ் திரையுலகில் கொடிக்கட்டி பறக்க நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!